மோடி தனது சொந்தக்கடையை நடத்துவதற்காக வளர்ச்சி வளர்ச்சி என்கிறார் ஆனால் ஒன்னும் இல்லை- மனம் திறக்கிறார் மன்மோகன் சிங்

0 25

image

தன் சொந்த ஆட்சியை நடத்துவதற்குத்தான் மோடி, வளர்ச்சி பற்றி பேசுகிறார் என மன்மோகன் சிங் சாடினார்.

நாட்டின் முதல் பிரதமர் நேருஜியின் 125–வது பிறந்த தினம் ஓராண்டு காலமாக கொண்டாடப்பட்டு வந்தது. இதன் நிறைவு விழா, டெல்லியில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டுபேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன்சிங்,

பிரதமர் மோடி வளர்ச்சிபற்றி பேசுகிறார். அவர் தனது சொந்தக்கடையை (சொந்த ஆட்சியை) நடத்துவதற்காகத்தான் இப்படி பேசுகிறார். நாட்டில் வளர்ச்சி இருக்கவா செய்கிறது? தாழ்த்தப்பட்ட மக்களை, மலைவாழ் பழங்குடி மக்களை, சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களை சென்றடையாத வளர்ச்சி, அர்த்தமற்ற வளர்ச்சி ஆகும்.

நேருவின் மரபை அழிக்க சில சக்திகள் முயற்சிக்கின்றன. நேரு, இந்த நாட்டின் வளர்ச்சிக்கு, என்றென்றைக்கும் நினைவுகூர்கிற விதத்தில் ஆற்றிய பணிகள் குறித்த விழிப்புணர்வை காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பரப்ப வேண்டும்.

நேருதான் ஜனநாயகத்தை நிறுவுவதிலும், முக்கிய அமைப்புகளை ஏற்படுத்துவதிலும், நாட்டில் அறிவியல், தொழில்நுட்பத்தை விருத்தி செய்வதிலும் முக்கிய பங்கு பணி ஆற்றினார்.

நேரு, ஜனநாயகத்தை மட்டுமே உருவாக்கவில்லை. விவசாயத்தையும், பொதுத்துறையையும் பலப்படுத்தி, ஜனநாயகத்தின் வேரையும் வலுவாக்கினார்.

எண்ணற்ற மதங்களை, இனங்களை கொண்டுள்ள இந்தியா போன்ற ஒரு நாட்டுக்கு ஒற்றுமைதான் திறவுகோல். இந்த நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கிற சக்திகளை நாம் தோற்கடிக்க வேண்டும்.

இந்தியாவில் பல்வேறு மதங்கள் மற்றும் கலாசாரங்களை கொண்ட மக்கள் வாழ்கிறார்கள். நமது நாடு முன்னோக்கி நடைபோடுவதற்கு, மக்கள் ஒன்றுபட்டு நிற்பது மிகவும் முக்கியம் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.