சத்துணவு ஊழியர்களை வஞ்சிக்குது தமிழக அரசு

0 3

IMG_8858தமிழக அரசு சத்துணவு ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்ற தவறினால் வருகின்ற ஜனவரி 19ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தினை நடத்த உள்ளதாக சத்துணவு ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது
தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் இன்று திருச்சியில் 11வது மாவட்ட மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணி கொடையாக 3 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். ஓய்வூதியம் மாதம் 3500ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட 3 கோரிக்கைகளை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கோரிக்கைகள் குறித்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய பழனிசாமி கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை நடத்திய போது 3 அமைச்சர்கள் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி அரசாணைகள் பெறப்பட்டது அதன்பின் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

IMG_8862 பின்னர் செப்டம்பர் 28ஆம் தேதி தமிழக முதல்வரை சந்திக்க பேரணிiயாக சென்ற பெண்களை தாக்கி பலரை காயப்படுத்திய நிலையில் செப்டம்பர் 30ஆம் தேதி சத்துணவு ஊழியர்கள் சங்க பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது அதன்பின் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை தமிழக முதல்வர் செய்ய தவறிவிட்டார் என சத்துணவு ஊழியர்கள் சங்கம் குற்றம்சாட்டிள்ளது. எனவே இன்று நடைபெறும் 11வது மாவட்ட மாநாட்டில் வருகின்ற டிசம்பர் மாதம் 22ஆம் தேதி லட்சகணக்கான சத்துணவு ஊழியர்களை அழைத்து சென்னையில் முதல்வரை சந்தித்து கோரிக்கைகளை முன் வைக்க உள்ளதாகவும், கோரிக்கைகளை நிறைவேற்ற தவறும் பட்சத்தில் வருகின்ற ஜனவரி மாதம் 19ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு ஊழியர்களையும் ஒன்று திரட்டி காலவரையற்ற வேலை நிறுதத்தை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.