”டாப்”புக்கு வராத ”டூப்”கள் !

0 21

ish1ஐஸ்வர்யாராயுடன் காதல் மோதல் வந்து பிரிந்ததும் ஐஸ் போன்ற தோற்றத்தில் இருந்த துபாய் பெண் சிநேகா உல்லாலை தனக்கு ஜோடியாக அறிமுகம் செய்தார் சல்மான்கான்.

அதன்பிறகு அவரை கண்டுகொள்ளவில்லை.

கத்ரினா கைஃப்புடன் காதல் மோதல் வந்து பிரிந்ததும் கத்ரி போன்ற தோற்றமுடைய மும்பைப் பெண் ஜரீன்கானை தனக்கு ஜோடியாக அறிமுகப்படுத்தினார் சல்மான்கான்.

ஆசைகாட்டி அறிமுகப்படுத்தியதுடன் சரி… பிறகு அவர் களைக் கண்டுகொள்ளவில்லை.

இருவரும் சல்மான் கண்டு கொள்ளாதது குறித்து வெளிப்படையாகவே தெரிவித்தும் பிரயோஜனமில்லை.

டோலிவுட்டுக்கு வந்தார் சிநேகா. இங்கும் பெரிசாக கிளிக் ஆகவில்லை.ish

கோலிவுட்டுக்கு வந்தார் ஜரீன்.

“கரிகாலன்’ படத்தில் விக்ரம் ஜோடியாக நடித்தார். அந்தப் படம் அப்படியே கிடப்பில் கிடக்கு.

இந்நிலையில்… ஒரு இந்திப் படத்தில் சான்ஸ் பிடித்து நடித்துவரும் சிநேகா… மீண்டும் சல்மானை சந்தித்து நட்பை புதுப்பித்திருக்கிறார். “ஜுராஸிக் வேர்ல்ட்’ படத்தை பார்க்கச் சென்ற சல்லு தன்னுடன் சிநேகாவையும் அழைத்துச்சென்றது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.