மலேரியாவின் பாதிப்பை தெரிந்து கொள்ளுங்கள்

0 7

cyclins என்று அழைக்கப்படும் புரத மூலக்கூறுகள் செல்களிலிருந்து வேகமாக பிரிந்து மலேரியா ஒட்டுண்ணிகள் உருவாக காரணமாக இருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தின் ஒரு குழு தலைமையிலான இந்த  ஆய்வு, புதிய மலேரியா சிகிச்சைகளுக்கு வழிவகுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

1 (1)

மலேரியாவால் கிட்டதட்ட ஒரு வருடத்திற்கு அரை மில்லியன் இறப்பு ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

செல் பிரிதலுக்கு தேவையான ஒரு முக்கியமான புரத மூலக்கூறு cyclins ஆகும். சிறிய மலேரியா ஒட்டுண்ணியை கொண்டுள்ள cyclins செல் வளர்ச்சியை எவ்வாறு பாதிக்கிறது என்பதை கண்டறிந்தனர். தற்போது மலேரியா ஒட்டுண்ணிகளை பொருத்து cyclins எண்ணிக்கை மற்றும் வகைகளை கண்டறிந்துள்ளனர்.

நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் உள்ள Dr Bill Wickstead மலேரியா ஒட்டுண்ணி உள்ள cyclin மரபணுக்களை மூன்று வெவ்வேறு வகைகளாக வைப்படுத்தினார். Cyclin புரத மரபணுக்கள் மற்ற விலங்குகளில் உள்ளதை விட மனிதனில் குறைவாக இருப்பதையும் அவர் கண்டறிந்தார்.

2 (1)

பேராசிரியர் ரீட்டா திவாரி பின்னர் மலேரியா ஒட்டுண்ணியில் உள்ள cyclin பற்றி மேலும் ஒரு ஆய்வு மேற்கொண்டார். மலேரியா ஒட்டுண்ணிகளில் காணப்படும் cyclins மிக விரைவில் செல் பிரிதலை ஏற்படுத்துகிறது என்பதை கண்டறிந்தார்.

இந்த மலேரியா ஒட்டுண்ணி கொசு மற்றும் மனிதனின் மேற்பகுதிகளில் நன்றாக வளர்கிறது என்பதையும் கண்டறிந்தார். இது மலேரியா தொடர்பான புதிய சிகிச்சைகளுக்கு வழிவகுக்கும் என்று கூறுகிறார்கள்.

ஒட்டுண்ணி செல் பிரிதல் பற்றிய நம்முடைய புரிதலை மேம்படுத்துதல், எதிர்காலத்தில் இந்த நோய் அகற்றப்படுவதற்கு வழிவகுக்கும் என்று நம்புவதாக இந்த ஆய்வின் முக்கிய ஆசிரியரான டாக்டர் Magali Roques கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.