நோயில் பாதிக்கப்பட்ட ரசிகையின் ஆசையை நிறைவேற்றிய ரஜினி- தமிழக ரசிகர்களின் ஆசையை தீர்ப்பாரா

0 22

rajinifanரஜினி நடிக்கும்  ‘கபாலி’ படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புக்காக தற்போது மலேசியாவில் தங்கியுள்ளார். மலேசியாவில் ரஜினி போகும் இடமெல்லாம் திருவிழாக் கோலம்தான். தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல், மலேசிய, ஜப்பானி, சீன மக்களும் ரஜினியைக் காண ஆவலுடன் திரண்டு வருகிறார்கள்.

பலர் அவரைக் கட்டிப் பிடித்து அன்பை வெளிப்படுத்துகின்றனர். சிலர் அவரது முழு உருவத்தையும் உடம்பில் பச்சைக் குத்திக் கொண்டு போய் அவரிடமே காட்டி மகிழ்கின்றனர்.

இருதய நோயால் பாதிக்கப்பட்ட தனது ரசிகையின் ஒருவரின் ஆசையை நிறைவேற்றியுள்ளார். அந்த ரசிகை நீண்ட நாட்களாக ரஜினியை எப்படியாவது நேரில் பார்க்க வேண்டும் என்று இருந்தாராம். அப்படி நினைத்த அந்த ரசிகையை நேரில் வரவழைத்து அவருடன் சிறிது நேரம் செலவிட்டு பேசி, அந்த ரசிகை சூப்பர் ஸ்டார் உடன் புகைபடம் எடுத்து கொண்டார். மிகப்பெரிய நடிகர், பிசியான நேரத்திலும் ஒரு ரசிகரின் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து, அவரை சந்தித்தது அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

இந்தப் படத்துக்கான எதிர்ப்பார்ப்பு மிகப் பெரிய அளவுக்கு உள்ளது.

kabali-stillsஅடுத்து ஷாரூக்கானின் ஃபேன். இந்தப் படம் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்ல்லர். மனீஷ் சர்மா இயக்கியுள்ள இந்தப் படமும் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகிறது.

மகேஷ் பாபு நடித்துள்ள பிரம்மோத்சவம் படமும் இதே காலகட்டத்தில் வெளியாகவிருக்கிறது.

இவை தவிர, சல்மான் கானின் சுல்தான், ஆமீர்கானின் டாங்கல், ஹ்ரித்திக் ரோஷனின் மொகஞ்சதாரோ போன்ற படங்களும் இந்த கோடையில் வெளியாகத் தயாராக உள்ளன.

தமிழில் கபாலி மட்டும் ஏப்ரல் 14-க்கு சோலோவாக வெளியாகும் எனத் தெரிகிறது. இந்நிலையில் ரஜினி அந்த ரசிகருடன் சிரித்து பேசுவது போன்ற வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.மலேசியா ரசிகரின் ஆசையை நிறைவேற்றி வரும் ரஜினி, தமிழக ரசிகர்களின் கனவான தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்பதை நிறைவேற்றுவாரா என்கிற விவாதம் நடக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.