சென்னையில் சுரங்கத்தில் சிக்கிய அரசு பேருந்து மீட்பு வீடியோ

0 12

சென்னை மேற்கு மாம்பலத்திலுள்ள அரங்கநாதன் சுரங்கத்தில் சிக்கிய மாநகர பேருந்து மீட்கப்பட்டது. கே.கே.நகர் பணிமனையில் இருந்து மாநகர போக்குவரத்து கழக ஊழியர்களுடன் திருவான்மியூர்சென்ற அந்த பேருந்து, அதிகாலை 5 மணியளவில் சுரங்கப்பாதையிலுள்ள மழை நீரில் சிக்கியது.

தொடர் மழை காரணமாக , சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த நீரின் அளவு அதிகரித்ததால் பேருந்தை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது. தண்ணீரை முழுமையாக வெளியேற்ற முடியாத சூழலில் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பேருந்து மீட்கப்பட்டது.

அரங்கநாதன் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ளதால் அந்த வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. தண்ணீரின் அளவு உயர்ந்து வருவதால், உடனடியாக அதனை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.