நடிகர் சங்கத்துக்குத் தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் ஜெயலலிதாவின் வாக்குறுதிக்காக உருகும் விஷால்

0 15

vishalதமிழக முதல்வர் ஜெயலலிதா உடன் நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், விஷால், கார்த்தி, பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் நேரில் சந்தித்து பேசி நன்றி தெரிவித்தனர்.

நடிகர் சங்கத்திற்கு கடந்த அக்டோபர் 18ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் சரத்குமார் தலைமையிலான அணியும், நாசர் தலைமையிலான அணியும் மோதின. இதில் நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. விஷால் பொதுச்செயலாளராகவும், கார்த்தி பொருளாளராகவும், பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் துணைத்தலைவர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

வெற்றி பெற்ற உடனேயே முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்தனர். இந்த நிலையில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், விஷால், கார்த்தி, பொன்வண்ணன், கருணாஸ் ஆகிய நடிகர் சங்க நிர்வாகிகள் முதல்வரைத் தலைமைச் செயலகத்தில் சந்தித்து, தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் சிறப்பாக நடக்க உதவியதற்கு நன்றி தெரிவித்தார்கள்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஷால், ‘இன்று தமிழக முதல்வரைச் சந்தித்தோம். அருமையான சந்திப்பு. நடிகர் சங்கத்துக்குத் தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று முதல்வர் தெரிவித்தார். முதல்வருக்கு நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.