பிரிட்டனை சேர்ந்த ராகுல் காந்திக்கு இந்திய குடியுாிமை எதற்கு? ரத்து செய்ய கோரும் சுப்ரமணியன் சுவாமி.

0 20

swamy-rahul-759ராகுல் காந்தி பிரிட்டன் நாட்டு குடிமகன் என்றும் அவரது இந்திய நாட்டு குடியுரிமையையும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.இது குறித்து செய்தியாளர்களிடம் சுப்பிரமணியன் சுவாமி பேசுகையில், பிரிட்டனில் ராகுல்காந்தி பங்குதாரராக உள்ள லண்டனில் இயங்கி வரும் பேக் காப்ஸ் என்ற கம்பெனி வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில் ராகுல்காந்தி பிரிட்டன் குடிமகன் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.சட்டப்படி இந்திய குடிமகனாக உள்ள ஒருவர் வேறு எந்த நாட்டின் குடிமகனாகவும் இருக்க முடியாது என்றும், அதனால் ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடந்த 12 ஆம் தேதி கடிதம் எழுதியுள்ளதாகவும், ராகுல்காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருப்பதாகவும் பிரதமர் இன்று இந்தியா திரும்பியதும் அது குறித்து ஆலோசிப்பார் என்று நம்புவதாக சுவாமி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.