முதல்வர் ஜெ.ஜெயலலிதா வலியுறுத்தல்: பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக மாற்றியமைக்க வேண்டும் .

0 22

jayalalitha-writing-letter-in-to-modi-720x480பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து அவர் வெளியிட்ட அறிக்கையில்: எண்ணெய் நிறுவனங்கள் நவம்பர் 15 நள்ளிரவு முதல் டீசல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 90 காசுகள் வீதமும், பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 36 காசுகள் வீதமும் உயர்த்தியுள்ளன. உலகச் சந்தையில் தற்போது உள்ள விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இயதிய ரூபாயின் தற்போதைய மதிப்பு ஆகியவை இந்த விலை உயர்வுக்கான காரணங்கள் என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. உலக அளவில் கச்சா எண்ணெய் விலையில் குறிப்பிடத்தக்க மாறுதல் ஏதுமில்லாத நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் உலக சந்தையில் டீசல் மற்றும் பெட்ரோல் விலை ஆகியவற்றின் அடிப்படையில் செய்யப்பட்ட இந்த விலை உயர்வு நியாயமானதல்ல.

கடந்த நவம்பர் 6 முதல் பெட்ரோலுக்கான கலால் வரியை லிட்டர் ஒன்றுக்கு ரூ.1.60 வீதமும், டீசலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.0.40 வீதமும் மத்திய அரசு உயர்த்தியுள்ள நிலையில் தற்போதைய இந்த விலை உயர்வு சரியானது அல்ல. பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளுக்கான கலால் வரியை உயர்த்தாமல் இருந்திருந்தாலே தற்போதைய விலை உயர்வு தேவையற்றதாக இருந்திருக்கும். கடந்த நவம்பர் மாதம் முதல் மத்திய அரசு ஐந்து முறை பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியை உயர்த்தியுள்ளது. பெட்ரோலுக்கான கலால் வரியை ரூ.8.35 என்ற வீதத்திலும் டீசலுக்கான கலால் வரியை ரூ.6.90 என்ற வீதத்திலும் உயர்த்தி மத்திய அரசுக்கு வருவாயை ஈட்டிக்கொண்டு, சாமானிய மக்கள் மீது விலை உயர்வை சுமத்துவது நியாயமற்ற செயல் ஆகும்.

முந்தைய காங்கிரஸ் கூட்டணி மத்திய அரசு கடைபிடித்த தவறான பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயக் கொள்கை மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்றும், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றினை இறக்குமதி செய்தால் என்ன விலை என்று கணக்கிட்டு விலை நிர்ணயம் செய்வது சரியானதல்ல என்றும் பல முறை எடுத்துரைத்துள்ளது. இந்த தவறான விலை நிர்ணயக் கொள்கையை மத்திய அரசு மாற்றி அமைக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

எண்ணெய் நிறுவனங்களால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும். இதன் காரணமாக ஏழை, எளிய, சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்படையும். எண்ணெய் நிறுவனங்களால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.