வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கிய நடிகர் லாரன்ஸ்

0 27

wpid-20151116_143233.jpgநடிகர் லாரன்ஸ் தன்னுடைய அறக்கட்டளை மூலம் பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார். ஏழை குழந்தைகளை படிக்க வைப்பது, ஊனமுற்றவர்களுக்கு உதவுவது என பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அதுபோல், தற்போது மழையால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உணவு வழங்கியுள்ளார்.

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழைக்கு பலர் உயிரிழந்து வருகிறார்கள். மேலும், பல வீடுகளில் தண்ணீர் புகுந்து மக்கள் வெளிவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வீடுகளில் சிக்கியுள்ள மக்கள் உணவு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வருகிறார்கள்.wpid-11233999_1664787330430476_8770083400234775144_n.jpg

இப்படி மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னுடைய அறக்கட்டளை மூலம் லாரன்ஸ் உணவு வழங்கி வருகிறார். இதற்கென்று தனி ஆட்களை நியமித்து உணவு செய்து மக்களுக்கு விநியோகம் செய்து வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.