மாற்றுதிறனாளியான கிரிக்கெட் வீரர் தோழனால் நரபலி செய்யப்பட்டு கொலை!

0 48

 தென் ஆப்பிரிக்காவில் இந்திய வம்சாவளி கிரிக்கெட் வீரர் கொடூரமான narapaliமுறையில் நரபலி கொடுக்கப்பட்டுள்ளார். அவரது தலையைத் துண்டித்து அவரது நெருங்கிய நண்பரைக் கொலை செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலை தொடர்பாக 3 பேர் கைது செய்ய்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் மன வளர்ச்சி குறைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கொல்லப்பட்ட வீரரின் பெயர் நவாஸ் Marrutiranaliyanaகான். 23 வயதாகும் இவர் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவரது நெருங்கிய நண்பர் தண்டோக்வேக் டுமா. 21 வயதான இவர், நவாஸ் கானுடன் எப்போதும் நெருக்கமாக பழகி வந்தார்.

சம்பவத்தன்று நவாஸ் கான் வீட்டுக்கு வந்த இவரும் மேலும் 2 பேரும் சேர்ந்து நவாஸ் கானை அவரது வீட்டுக்குப் பின்னால் உள்ள புதர்ப் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து நவாஸ் கானை தலையை வெட்டிக் கொடூரமாகக் கொலை செய்தனர். உள்ளூர் மந்திரவாதி ஒருவரின் ஆலோசனையின்பேரிலேயே டுமா இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது. இந்தக் கொலை தொடர்பாக டுமா உள்ளிட்ட 3 பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். போலீஸாரிடம் டுமா கொடுத்த வாக்குமூலத்தின்போது, மந்திரவாதிதான் தனது பிரச்சினைகள் தீர நரபலி கொடுக்க வேண்டும் என்று் துண்டித்த தலையுடன் பூஜை செய்ய வேண்டும் என்றும் கூறியதாகவும், இதனால்தான் நவாஸ் கானை கொலை செய்ததாகவும் கூறியுள்ளார். உம்ஸின்டோ என்ற கடலோர நகரத்தில் இந்த கொடுமையான சம்பவம் நடந்துள்ளது. கொல்லப்பட்ட நவாஸ் கான் அருமையான கிரிக்கெட் வீரர். 2013ம் ஆண்டுக்கான, சிறந்த அறிவார்ந்த மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர் என்ற விருதையும் இவர் வென்றவர் ஆவார். இதுகுறித்து நவாஸ் கானின் தாயார் ஜாகியா கான் கூறுகையில், எனது மகனுக்கு மிகவும் பிடித்த வீரர் ஹசிம் அம்லாதான். அந்த விருதைக் கூட அம்லா கையிலிருந்துதான் பெற்றார். மிக மிகப் பெருமையாக அதைக் கருதினார் என்று கண்ணீர் மல்கக் கூறினார். நவாஸ் கானால் எழுத முடியாது, படிக்க முடியாது. ஆனால் விளையாட்டில் பிரமாதமாக ஜொலித்து வந்தார். தன்னைப் பற்றிக் குறை கூறுவோர் வாயடைத்துப் போகும் அளவுக்கு கிரிக்கெட்டில் சிறந்து விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.