மூன்றாம் வகுப்பிலேயே காதல்-பிறந்தநாளில் மனம் திறக்கும் நடிகை நயன்தாரா

0 43

Nayandharaதென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகையாக இன்றும் இருந்து வருபவர் நயன்தாரா. இவரின் பிறந்தநாளை இன்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் தன்னுடைய முதல் காதல் பற்றி இவர் மனம் திறந்துள்ளார். இதில் இவர் கூறுகையில் ‘நான் மூன்றாவது படிக்கும் போது ஒரு பையன் என் மேஜையில் ரோஜா பூ வைப்பான்.

ஒரு நாள் நான் ஆசிரியரிடம் இதுக்குறித்து சொல்ல, அவனை கூப்பிட்டு கண்டித்தார்கள், அதிலிருந்து அவன் என் முகத்தை கூட பார்க்க மாட்டான், ஆனால், இன்றும் நான் யோசிப்பது அந்த வயதில் அவனுக்கு காதல் பற்றி என்ன தெரியும் என்பது தான்’ என கூறியுள்ளார்.

இந்நிலையில் சினிமாவில் நடிக்க வந்து சில ஆண்டுகளில் இருந்தே காதல் கிசுகிசுக்களில் சிக்கி வருபவர் நயன்தாரா. அப்படி அவரை சிம்பு, பிரபுதேவாவுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்ட காதல் செய்திகள் பின்னர் உண்மையாகி விட்டன. ஆனால் அவரது காதலில் என்ன குறைபாடோ தெரியவில்லை உடனுக்குடன் நோ டீலில் முடிந்து விடுகிறது. மேலும், வல்லவன் படத்தில் நடித்தபோது காதலித்த சிம்புவுடன் தற்போது மீண்டும் இது நம்ம ஆளு படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா.

அதேசமயம், பிரபுதேவாவின் பெயரை யாராவது உச்சரித்தாலே அவரது முகம் வாடிப்போய் விடுகிறது. இந்த நிலையில், தற்போது மூன்றாவதாக நானும் ரவுடிதான் பட இயக்குனர் விக்னேஷ்சிவனுடன் காதல் கிசுகிசுவில் சிக்கியிருக்கிறார் நயன்தாரா. இது அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தபோதில் இருந்தே மீடியாக்களில் பரபரப்பாக பரவிக்கொண்டு வருகிறது. அதையடுத்து, அப்படத்தின் பிரஸ்மீட்டில் மேடையில் பேசிய பார்த்திபன் உள்ளிட்ட சிலரும் எரியுற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றிய கதையாய், விக்னேஷ்சிவனை மேடையில் வைத்துக்கொண்டே அவர்களின் காதலை உறுதிப்படுத்தும் வகையில் பேசினார்கள். ஆனால், இப்படி அவர்கள் பேசியது நயன்தாராவின காதுக்கு சென்றபோது ரொம்பவே டென்சனாகி விட்டாராம். காரணம், பத்திரிகைகளில் விக்னேஷ்சிவனுடன் தன்னை இணைத்து செய்தி வெளியானபோது அதை பொருட்படுத்தாத நயன்தாராவினால் அவர்கள் மேடை போட்டு பேசியதை தாங்கிக்கொள்ள முடியவில்லையாம் என்றும் கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.