100க்கும் மேற்பட்ட குடிசைகளை தூக்கி எறிந்த சூறாவளி

0 3

article-2662174-1EE8982100000578-264_634x474சங்கரன்கோவில் அருகில் உள்ள ஜமீன் இலந்தைகுளம் கிராமத்தில் திடீரென வீசிய சூறைக்காற்றால் 100க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனை தொடர்ந்து வீசிய சூறைக் காற்றால், இலந்தைகுளம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன.

அப்பகுதியில் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்தன. வீடுகளின் ஓடுகள் சூறைக்காற்றில் சரிந்து விழுந்ததில் 6 பெண்கள் உள்பட 10 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இயற்கையின் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட ஜமீன்குளம் கிராமத்தில் அரசு அதிகாரிகள் முகாமிட்டு சீரமைப்பு பணிகளை செய்து வருகின்றனர்.

இதனிடையே திடீரென விசிய சூறைக்காற்றால் வாழை, தக்காளி, நெற்பயிர்கள் அனைத்தும் முழுமையாக சேதம் அடைந்துள்ளது. பாதிக்கப்பட்ட கிராம மக்கள் அனைவரும் அங்குள்ள ஊராட்சி அலுவலக கட்டிடம் மற்றும் பள்ளிக் கட்டிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மருத்துவ குழுவினர் முகாமிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.