ஐ.பி.எஸ் என்று சொல்லி ஊரை ஏமாற்றிய சூர்யா, உதவிய போலிஸ் அதிகாரி………. கிருஷ்ணகிரியில் பரபரப்பு

0 38

Tamil_News_large_139054020151119082029கிருஷ்ணகிரியில் போலி ஐ.பி.எஸ்., அதிகாரி மற்றும் அவருக்கு உதவிய ஏட்டை, போலீசார் கைது செய்தனர்.  கிருஷ்ணகிரி-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், பையனப்பள்ளி டோல்கேட் அருகே, எஸ்.பி., திருநாவுக்கரசு மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமாக பல்சர் பைக்கில் வந்த, இருவர் சாலையோரம் நின்று டீ குடித்துகொண்டிருந்தனர். இதில், ஒருவர் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அணியும் சீருடையில் இருந்ததால், சந்தேகமடைந்த, எஸ்.பி., திருநாவுக்கரசு, அவர்களிடம் விசாரணை நடத்தினார்.

‘ஐ.பி.எஸ்., தேர்வு பெற்று, நேஷனல் போலீஸ் அகடாமியில் பயிற்சி முடித்துவிட்டு, தற்போது கோயம்புதூரில், ஏ.எஸ்.பி.,யாக பயிற்சி பெற்று வருகிறேன்’ என, ஒருவர் தெரிவித்தார். சந்தேகமடைந்த எஸ்.பி., திருநாவுக்கரசு, கோவையில் உள்ள, ஐ.ஜி., அலுவலகத்தை தொடர்பு கொண்டு விசாரித்ததில், அவர் கூறியது பொய் என்று தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் பிடித்து விசாரித்ததில், அவர்கள், தேனி மாவட்டம், கம்பம் அடுத்த கே.கே.பட்டி நந்தகோபால் வீதியைச் சேர்ந்த கோபி என்பவரது மகன் சூர்யா, 21 என்பதும், ப்ளஸ் 2 வரை படித்துவிட்டு, பெங்களூருவில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில், இரண்டு மாதங்களுக்கு முன் பணிபுரிந்ததும் தெரிந்தது. மற்றொருவர் திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த வெள்ளக்கோவில் ஏ.பி.புதூரைச் சேர்ந்த பொன்மணி, 31, என்பதும், இவர், கோவை, சி.ஆர்.பி.எப்.,ல் ஏட்டாக பணிபுரிந்து வருவதும் தெரிந்தது. சூர்யா தன்னை ஐ.பி.எஸ்., அதிகாரி என கூறி, போலீஸ் சீருடையில் மோசடியில் ஈடுபட சுற்றி திரிந்ததும், அதற்கு ஏட்டு பொன்மணி உதவியதும் தெரியவந்தது. இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, சூர்யா, பொன்னுமணி ஆகிய, இருவரையும் கைது, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.