சீனாவுடன் இன்டர்நெட்டில் போட்டி போடும் இந்தியர்கள் – வெல்ல போவது யார்?

0 35

internet-usage2015ஆம் ஆண்டில் இந்தியாவில் இண்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை சுமார் 49 சதவீதம் அதிகரித்துள்ளதாக IAMAI அமைப்பு தெரிவித்துள்ளது. இதன் மூலம் இண்டர்நெட் பயன்பாட்டில் அமெரிக்காவை 3வது இடத்திற்கு விரட்டும் நிலையில் இந்தியா உயர்ந்துள்ளது.

                 டிசம்பர் மாதத்திற்குள் இண்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 402 மில்லியனாக உயரும் என IAMAI அமைப்பு கணித்துள்ளது, இதன் மூலம் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி இண்டர்நெட்  பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் இந்தியா 2வது இடத்தைப் பிடிக்க உள்ளது.

                மொபைல் வாடிக்கையாளர்கள் இதில் 306 மில்லியன் வாடிக்கையாளர்கள் மொபைல் மூலமாக இண்டர்நெட் பயன்படுத்துகின்றனர். அக்டோபர் மாதத்தில் இதன் அளவு வெறும் 276 மில்லியனாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

                2016ஆம் ஆண்டில்… மேலும் 2016ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் இதன் அளவு 462 மில்லயன் வரை உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகளை இண்டர்நெட் மற்றும் மொபைல் அசோசியேஷன் ஆப் இந்தியா (IAMAI) மற்றும் IMRD அமைப்புகள் இணைந்து நடத்தியுள்ளது.

                சீனா , அமெரிக்கா தற்போதைய நிலையில் இண்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் டிசம்பர் மாதம் அமெரிக்காவை பின்னுக்கத் தள்ளி 2வது இடத்தை இந்தியா பிடித்துவிடும்.

                                மேலும் இந்த ஆய்வில் இந்திய நகரபுறங்களில் இண்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 65 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாகவும், கிராமாபுறகங்களில் 99% உயர்ந்து 80மில்லியனாக உயர்ந்தது தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.