523 சிங்கங்களின் நடுவே உலா வரும் 12 இந்திய பெண்கள் !

0 57

p90cபிரதமர் மோடி தன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காலரைத் தூக்கிக்கொண்டு ஒரு விஷயத்தை ஷேர் செய்திருக்கிறார்.

அது… குஜராத் வனச் சரணாலயத்தில் இட ஒதுக்கீட்டின்படி பெண்களை அதிக அளவில்  நியமித்திருக்கிறார் என்ற செய்தி. ஸ்கூல் படிக்கும்போது இந்தியாவில் சிங்கங்கள் சரணாலயம் எங்கே இருக்கிறது என்ற கேள்விக்கு பதிலாகச் சொல்வோமே? குஜராத்தின் கிர் தேசியப் பூங்கா. அங்கே தற்போது 43 பெண்கள் அதிகாரிகளாக, ஊழியர்களாகப் பணி ஆற்றுகிறார்கள். அதில் 12 பேர் கிர் சரணாலயத்தினுள் டூட்டி பார்க்கிறார்கள். உலகின் மிக முக்கிய இனமான ஆசியச் சிங்கங்கள் வாழும் இடத்தில் பணி ஆற்றும் அவர்கள் சந்திக்கும் சவால்கள் இப்போது இணைய வைரல்!p90a

‘‘நான் ஃபாரஸ்ட்டரைத் திருமணம் செய்துகொண்டு ஒன்றரை வயதுக் குழந்தையோடு இங்கே பணியில் இருக்கிறேன். எட்டு மாதம் வரை கர்ப்பிணியாக டூட்டியில் பிஸியாக இருந்தேன். உள்ளே இருக்கும் 523 சிங்கங்களையும் என் குழந்தையாகத்தான் பாவிக்கிறேன். என் குழந்தைக்குப் பாலூட்டிவிட்டு சிங்கங்களைப் பார்க்கக் கிளம்பிவிடுவேன். சிங்கங்களைவிட அருகில் இருந்து காட்டின் மரங்களை அழிக்கும் கிராமவாசிகள்தான் ஆபத்தானவர்கள். உண்மையில் அவர்களுக்காகத்தான் பயப்படுகிறேன்’’ என்கிறார் அங்கு பணி ஆற்றும் பதிஜா என்ற வனப் பாதுகாவலர்!

lions-gir-gujarat31 வயதான வதேர் என்ற பெண்மணி 200-க்கும் அதிகமான சிங்கக்குட்டிகளை இயற்கைச் சீற்றத்திலிருந்து காப்பாற்றி இருக்கிறார். ‘‘ஒருமுறை ஒரு தாய் சிங்கம் என்னையும் என் உதவியாளர்களையும் விரட்டியது. உயிருக்குப் பயந்து புதருக்குள் ஓடி ஒளிந்தபோது சிங்கங்கள் மீது தடியினை வீசும்போது அசந்தர்ப்பமாக என் தலையில் பட்டு மூர்ச்சையாகி  மயங்கிவிட்டேன். நல்லவேளை சிங்கம் என் பக்கத்தில் வந்து ஒன்றும் செய்யாமல் திரும்பிப் போய்விட்டது’’ என திகில் அனுபவங்களைச் சொல்கிறார்!

24 வயதான தர்ஷனா என்ற வனப் பாதுகாவலர் ஒரு விவசாயியை சிங்கம் அடித்துக் கொன்றபோது நேரில் பார்த்து தடுக்க முற்பட்டு காயமடைந்திருக்கிறார். இந்த 12 பெண்கள் டீமோடு அஹமதாபாத்திலிருந்து வந்த இன்னொரு டீமும் இணைந்து 15 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு கிராமத்தினுள் புகுந்த சிங்கம் ஒன்றை மீட்டு அதன் குட்டியோடு சேர்த்து வைத்து சாந்தப்படுத்தியிருக்கிறார்கள்!hqdefault

இன்னொரு காவலரான தர்ஷனாவோடு பிறந்தவர்கள் எட்டு பெண் குழந்தைகளாம். இவர் ஒருவரின் வருமானத்தை நம்பித்தான் அந்தக் குடும்பம் வாழ்கிறது. ஆரம்பத்தில் 7,800 ரூபாய் சம்பளமாக இருந்த வனப் பாதுகாவலர்கள் மற்றும் ஃபாரஸ்டர்கள் சம்பளம் இப்போது 22,000 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. உயிரைத் துச்சமென மதித்து வேலை பார்க்கும் இந்த 12 பேருக்கும் வருடத்துக்கு 12 நாட்கள் மட்டுமே அரசு விடுமுறை தவிர்த்த விடுப்பு நாட்கள்!

இவர்கள் அனைவரும் ஒரே டீமாக செயல்பட்டாலும் பெரும்பாலும் தனித்தனி இடங்களில் அடர்ந்த காட்டுக்குள் பணி நிமித்தம் அடிக்கடி செல்வார்கள். கிட்டத்தட்ட 1,412 கி.மீ சதுரப் பரப்பளவுகொண்ட காடு. அங்கிருக்கும் 523 சிங்கங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான சிறுத்தைகளும் உலாவும் காடு என்பதை மனதில் வைத்துக்கொண்டு படியுங்கள். காலரை யார் தூக்கி விட்டுக்கொள்வது என்று புரியும்!

Leave A Reply

Your email address will not be published.