ஆலோசகர் பணிக்கு வெளிநாட்டில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

0 2

FOREIGNதமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் பெருமளவில் இந்திய தொழிலாளர்களை குறிப்பாக தமிழக தொழிலாளர்களை பல்வேறு நாடுகளில் பணியமர்த்தி வருகிறது. இந்நிறுவனத்தின் செயலாக்கத்தினை மேலும் பரவலாக்கும் பொருட்டு வெளிநாட்டிற்கு பெருமளவில் தொழிலாளர்களை பணியமர்த்த முடிவு செய்துள்ளது.

எனவே, வெளிநாட்டின் வேலையளிப்போரிடமிருந்து பெருமளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு பெற்றுத் தருவதுடன் இந்திய தொழிலாளர்களை பணியமர்த்துவதற்கான நடைமுறைகள் அறிந்த ஆலோசகர்கள் (ஸ்ரீர்ய்ள்ன்ப்ற்ஹய்ற்) தேவைப்படுகிறார்கள். ஆலோசகர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்துவதற்கான விரிவான விதிமுறைகள் அடங்கிய விவரங்கள் ஜ்ஜ்ஜ்.ர்ம்ஸ்ரீம்ஹய்ல்ர்ஜ்ங்ழ்.ஸ்ரீர்ம் என்ற இந்நிறுவன இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உரிய தகுதி மற்றும் அனுபவம் உள்ள ஆலோசகர்கள் தங்களின் விருப்பத்துடன் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து 25.11.2015க்குள் அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

குறிப்பிட்டுள்ள படிவங்களில் கோரியுள்ள உரிய விவரங்கள் மற்றும் சான்றிதழ்களின் நகல்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.