பொதுத்துறை வங்கிகளில் முக்கியமான ஆந்திரா வங்கியில் சிறந்த காலிப்பணியிடங்கள்.

0 11

bank 1இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ஆந்திரா வங்கி முக்கியமான ஒரு வங்கியாகும். கடந்த 1923லேயே நிறுவப்பட்ட ஆந்திரா வங்கி பின்னர் பொதுவுடைமையாக்கப்பட்டது. இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் இருக்கின்றன. இந்த வங்கியும், கல்வித் துறையில் பிரசித்தி பெற்ற மனிபல் பல்கலைக் கழகமும் இணைந்து வங்கி மற்றும் நிதித்துறை முதுநிலை டிப்ளமோ படிப்புடன் கூடிய பணிவாய்ப்பை வழங்குவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இந்த படிப்பை வெற்றிகரமாக முடிப்பவர்கள் ஆந்திரா வங்கியின் புரொபேஷனரி அதிகாரியாக பணி நியமனம் பெற முடியும் என்பதை நினைவில் கொள்ளவும். இதன் மூலம் 200 இடங்களை நிரப்ப ஆந்திரா வங்கி திட்டமிட்டுள்ளது.

வயது: 01.09.2015 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 20 முதல் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: 01.09.2015 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் ஏதாவது ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ஆந்திரா வங்கியின் மேற்கண்ட படிப்புடன் கூடிய வேலைக்கு விண்ணப்பிக்க ரூ.600/-ஐ கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்ச்சி முறை: ஆன்-லைன் முறையிலான எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். எழுத்துத் தேர்வை பெங்களூரு, சென்னை, புதுடில்லி, ஐதராபாத், கோல்கட்டா, மும்பை, விஜயவாடா, விசாகப்பட்டினம் ஆகிய ஏதாவது ஒரு மையத்தில் எதிர்கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். முழுமையான தகவல்களை இணையதளத்தில் அறிந்து அதன் பின்னர் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 01.12.2015

இணையதள முகவரி: http://andhrabank.in/English/Recruitment.aspx

 

Leave A Reply

Your email address will not be published.