தேர்தலை மையப்படுத்தி வசனங்கள் மீண்டும் நடிக்க வருகிறார் விஜயகாந்த்

0 20

Tamizhan-Enru-Solஅரசியலில் எதிர்கட்சி தலைவராக வலம் வரும் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக சினிமாவில் நடைக்காமல் மக்கள் பணியில் பிஸியாக இருந்தார்.  அரசியலில் தீவிர கவனம் செலுத்திய பிறகு, நடிப்பதைக் குறைத்துக்கொண்டதாக சொல்லப்பட்ட நிலையில்  விஜயகாந்த் ஐந்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்க வருகிறார்.

விஜயகாந்த்   தான் இயக்கி  நாயகனாக  நடித்த ‘விருதகிரி’ படம் கடந்த  2010-ல் வெளிவந்தது. அதற்குப் பிறகு, தன் மகன் சண்முகபாண்டியன் நடித்த ‘சகாப்தம்’ படத்தில் கவுரவத் தோற்றத்தில் மட்டும் நடித்தார். இந்த இரண்டு படங்களும் வெற்றியடையவில்லை.

இந்நிலையில், 5 ஆண்டு இடை வெளிக்குப் பிறகு ‘தமிழன் என்று சொல்’ என்ற படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார்.  இந்த படத்தில் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனும் நடிக்கிறார்.

தமிழ் ஸ்டுடியோஸ் எண்டெர்டெயின்மென்ட் மீடியா நெட்வொர்க்ஸ் சார்பாக கோவர்தனி வரதராஜன் என்பவர் தயாரிக்கும் இந்த படத்திற்கு தனி ஒருவன் படத்திற்கு இசையமைத்த ஹிப் ஹாப் தமிழா ஆதி  இசையமைக்க,  அறிமுக இயக்குநர் அருண் பொன்னம் பலம் இயக்குகிறார்.

இதன் படப்பிடிப்பு துவக்க விழா சென்னையில்  இன்று காலை  சென்னையில் உள்ள ஆர்.கே.வி.ஸ்டுடியோவில் இப்படத்திற்கு பூஜை பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது

இதற்கான படப்பிடிப்பை சென்னை தவிர, வெளிநாடுகளிலும் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அரசியலில் சூறாவளியாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விஜயகாந்த், இப்போது மீண்டும் நடிப்பில் அசத்தலாக வலம் வரப்போகிறார் என்கிறார்கள் கேப்டன் ரசிகர்கள். மேலும்   தமிழகத்தில் சட்டமன்றத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் திரைப்படம் ஒன்றில் நடிக்க இருப்பதும், அந்த படத்தில் தேர்தலை மையமாக வைத்து வசனங்கள் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave A Reply

Your email address will not be published.