காலநிலை மாற்றத்தால் 20 ஆண்டுகளில் 6 லட்சம் பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர்

0 2

Japan-boat-roof_1848631cஉலக அளவில் மாறி வரும் காலநிலைக்கு ஏற்ப மனிதர்கள் தங்களை பாதுகாத்து கொண்டாலும், இயற்கையின் கோர தன்மையை யாராலும் தடுக்க இயலாமல் போனதால் இயற்கை தன்னுடைய பணியை நிரைவாக செய்து வருகிறது. எத்தனை தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும் இயற்கையை மீறிய செயல் என்பது மனிதனின் அறிவை தாண்டி நடக்கும் பயங்கரங்கள் தான் என்பது ஒவ்வொரு மனிதனும் உணர வேண்டியது.
இயற்கை சீற்றங்கள் குறித்த பல தகவல்களையும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் நாம் அன்றாடம் அறிந்து கொண்டே தான் இருக்கிறோம். அப்படிபட்ட இந்த இயற்கை சீற்றத்தினால் எத்தனை உயிர்கள் காவு காவங்கப்பட்டுள்ளது என்ற ஆய்வில் இறங்கிய ஐக்கிய நாடுகள் சபையானது அறிவித்துள்ளது. இந்த ஆய்வானது கடந்த 1995ஆம் ஆண்டிலிருந்து 20 வருடங்களை கடந்து இன்று வரை எத்தனை உயிர்கள் பலியாகியுள்ளது என்ற தகவலை வழங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

73763-rescue-workers-recover-a-body-in-rikuzentakata-city-iwate-prefecture-i
இதுக்குறித்த செய்திக்குறிப்பில் மார்கரெட்டா வல்ஸ்டோரம் என்பவர் காலநிலை மாற்றத்தின் விளைவாக இடம் பெற்ற வெள்ளம், புயல், மற்றும் அதீத காலநிலைகள் காரணமாக 606,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 4.1 பில்லியன் பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்
இதனிடையே ஐ.நாவில் வருகின்ற 30ஆம் தேதி காலநிலை மாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் குறித்து கூட்டம் நடைபெறும் நிலையில் இந்த புள்ளி விவரம் போதுமான அளவிற்க்கு உறுதுணையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.