தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் -அதிமுக புதிய அஸ்திரம்

0 9

Thambidurai  தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் நாடாளுமன்றத்தில் அதிமுக வலியுறுத்தல் தமிழ் உட்பட அனைத்து இந்திய மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வேண்டும் என  நாடாளுமன்ற  மக்களவையில் அ.தி.மு.க உறுப்பினரும், துணை சபாநாயகருமான தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார்.

 

மக்களவையில் இன்று ,கூட்டாட்சித் தத்துவம் குறித்து பேசிய தம்பிதுரை,கூட்டாட்சி குறித்து பேசும்போது, அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து மொழிகளுக்கும் மத்திய அரசு, ஏன் ஆட்சி மொழி அந்தஸ்து தரக் கூடாது? என கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ், தெலுகு,வங்காளம் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளுக்கும் ஆட்சி மொழி அந்தஸ்தை தர வேண்டும். இது கோரிக்கை அல்ல. வலியுறுத்தல் என்று கூறினார். ஏனெனில், தமிழக முதலமைச்சர் தொடர்ந்து இதனை வலியுறுத்தி வருகிறார். இதை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். இதை நாடே எதிர்பார்த்து காத்திருக்கிறது என தெரிவித்தார்.

தமிழ்மொழியை ஆட்சிமொழியாக்க வேண்டும் என சரியான நாளில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.