அரசியலமைப்பு பற்றிய விவாதத்தின் போது மக்களவையில் தூங்கி வழிந்த மோடி- வைரலாகும் வீடியோ

0 8

modi sleepingஇந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்ட நாளில் நடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று பல்வேறு விவாதங்கள் சூடாக நடந்துகொண்டிருக்கு பிரதர் மோடி தூங்கி வழிந்தது இப்போது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஜி.எஸ்.டி மசோதா, பீகாரில் பிஜேபி படுதோல்வி உள்ளிட்ட பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று கூடியது. நேற்று காலை 11 மணிக்கு கூட்டத்தொடர் தொடங்கிய உடன் லோக்சபாவில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர். மறைந்த உறுப்பினர்களுக்கு லோக்சபா, ராஜ்யசபா ஆகிய இரு அவைகளிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டதும். பிறகு ராஜ்யசபா நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட நாள் மற்றும் இந்த சட்டத்தை வடிவமைத்த, சட்டமேதை அம்பேத்கரின், 125வது பிறந்த நாள் போன்றவற்றை கவுரவிக்கும் வகையிலும் சிறப்பு விவாதம் நடைபெற்றது. மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், அரசியலமைப்பு சட்டம் குறித்தும், அம்பேத்கரை நினைவு கூர்ந்தும் பேசினார்.

பின்னர்  இந்திய அரசியலமைப்பு சிற்பியான அம்பேத்கரின் 125–வது பிறந்த தினத்தையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அரசியலமைப்பு குறித்து பாராளுமன்றத்தில் 2 நாட்கள் சிறப்பு விவாதத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.modi sleep

நேற்று தொடங்கிய இந்த விவாதத்தை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்து பேசினார். பின்னர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இந்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது ராஜ்நாத் சிங்,

அரசமைப்புச்சட்ட முகப்புரையில் மதச்சார்பின்மை என்ற பதத்தை சேர்ப்பது பற்றி நினைத்ததே இல்லை. ஆனால், 1976-ல் திருத்தம் மூலமாக இது சேர்க்கப்பட்டது. அரசமைப்புச் சட்டத்தின் 42-வது திருத்தம் மூலமாக முகப்புரையில் சோஷலிஸ்ட் மற்றும் மதச்சார்பற்ற (செக்யூலர்) என்ற பதங்கள் சேர்க்கப்பட்டன. இதற்கு ஆட்சேபம் இல்லை. நடந்த சம்பவங்கள் நடந்துபோனவையாக மறப்போம்.

அரசமைப்புச் சட்டத்தின் அங்கம் இந்த பதங்கள் என்பதால், முகப்புரையில் இவற்றை சேர்ப்பதற்கான அவசியம் இல்லை என்பதால் அம்பேத்கர் அதை நினைக்கவே இல்லை. இந்திய கட்டமைப்புடன் இணைந்தது இது என்றார். அப்போது காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர்” என்றார் ராஜ்நாத்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, “முகப்புரையில் இந்த வார்த்தையை சேர்க்க ஆதரவு தெரிவித்தவர்தான் அம்பேத்கர். ஆனால், அப்போது நிலவிய சூழல் சாதகமாக இல்லாததால் செய்ய முடியாமல் போனது” என்று ராஜ்நாத்திற்கு  பதிலடி தரும் வகையில் சரமாரியாக வாதங்களை எடுத்துரைத்தார்.

அதனை தொடர்ந்து  பேசிய ராஜ்நாத், மதச்சார்பின்மை என்ற வார்த்தை தவறுதலாகப் பயன்படுத்தப்படுகிறது. இது முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். இந்த வார்த்தை தவறாகப் பயன்படுத்தப்படுவதால் சமூகத்தில் பதற்றம் உருவாக காரணமாகிறது. இதனால் சமூக நல்லிணக்கத்தைக் கட்டிக்காப்பது முடியாமல் போகிறது.

அதேபோல், இடஒதுக்கீடு விவகாரம் அரசியலாக்கப்படுகிறது. இட ஒதுக்கீடு என்பது அரசமைப்புச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. எனவே இதில் புதிதாக விவாதிக்க ஒன்றும் இல்லை. சமூக அரசியல் தேவை அடிப்படையில் இடஒதுக்கீடு தரப்படுகிறது.

சாதி, மதம் பேதமின்றி ஒவ்வொரு இந்தியரின் பாதுகாப்பு தருவதில் அரசு உறுதி பூண்டுள்ளது. இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்தியர்களே, அவர்கள் நமது சகோதரர்கள். இந்தியாவில்தான் 72 பிரிவு முஸ்லிம்களும் வாழ்கின்றனர். அதேபோல் யூதர்கள் போன்ற பிரிவினரும் பிற இடங்களில் வஞ்சிக்கப்படும் நிலையில் இங்கு நிம்மதியாக வாழ்கிறார்கள். தேசத்தை கட்டமைத்ததில் மறைந்த பிரதமர் ஜவாஹர்லால் நேரு, சர்தார் வல்லப பாய் படேல் ஆகியோரின் பங்களிப்பு நினைவுகூரத்தக்கது. அம்பேத்கரின் சித்தாத்தங்கள், அரசமைப்புச் சட்டத்தால் ஈர்க்கப்பட்டவர் பிரதமர் நரேந்திர மோடி. அதனால்தான் ஜன் தன் யோஜனா, தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கினார் என ராஜ்நாத் பேசினார்.modi sleeping a

இந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய சோனியா, அரசமைப்புச் சட்டத்தின் லட்சியங்கள், கோட்பாடுகளுக்கு தற்போது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் அதை வரைவுசெய்தபோது அதில் பங்கேற்காதவர்கள் இப்போது அதன் மீது பிரமாணம் எடுக்கிறார்கள். உரிமை கோருகிறார்கள்.

அரசமைப்புச் சட்டத்தில் உறுதியாக இருப்பதாக விவாதம் நடத்துகிறார்கள். இதைவிட நகைப்புக்குரியது வேறு எதுவும் இருக்க முடியாது.

கடந்த சில மாதங்களாக நாம் பார்க்கும் சம்பவங்கள் அரசமைப்புச் சட்ட கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானவை. அரசமைப்புச் சட்டத்தை வரைவு செய்தபோதும் சுதந்திர போராட்டத்திலும் காங்கிரஸ் பங்கு முக்கியமானது.

அரசமைப்புச் சட்டம் எவ்வளவுதான் நல்லதாக இருந்தாலும் அதை அமல்படுத்துபவர்கள் மோசமானவர்களாக இருந்தால் இறுதி பலன் மோசமாகவே இருக்கும் என்றே அம்பேத்கர் எச்சரித்துள்ளார். அம்பேத்கரை இப்போது அரவணைத்துக்கொண்டு சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

அரசமைப்புச் சட்டத்தை வடிவமைத்ததில் காங்கிரஸுக்கு மிகப் பெரிய பங்கு உள்ளது. அதற்குதான் அதன் மீது உரிமை கோரமுடியும். அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனியிலிருந்து அரசியல் கோட்பாடு, பொருளாதாரம் பற்றி மேல்படிப்பு முடித்து திரும்பிய அம்பேத்கரின் உன்னதத் திறமையை காங்கிரஸ்தான் கண்டறிந்தது. எஸ்.டி.களின் நலனுக்காக போராடியவர் அவர்.

1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி அரசமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதும், இந்தச் சட்டத்தை வரைவுசெய்த கமிட்டிக்கு அம்பேத்கரைவிட வேறு சிறந்த தலைவராக வேறு இருக்க முடியாது என்று பாராட்டியுள்ளார் ராஜேந்திர பிரசாத் என்றார்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில்  பிரதமர் மோடி மக்களவையிலேயே தூங்கி வழிந்தார். ராஜ்நாத் சிங் தன்னை பாராட்டும்போதுகூட மோடி தூங்கிவிட்டார். இதனை பார்த்த பலரும் பதறினார்கள்.

தொடர்ந்து வெளிநாட்டு பயணம். கடந்த சில நாட்களாக அரசு முறை சுற்றுப்பயணமாக சிங்கப்பூர், மலேசியா சென்றிருந்த மோடி  அங்கு நடைபெற்ற ஆசிய உச்சி மாநாடு, இந்திய வம்சாவளியினருடன் சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்த பயண களைப்பில் மோடி தூங்கிவிட்டார் என பலரும் டுவிட் செய்து வருகின்றார்கள்.

சிலரோ இதேபோல் சில மாதங்களுக்கு முன்னர் கங்கிரஸ் துணைத்தலைவர் ரகுல்காந்தி மக்களவையில் தூங்கி வலிந்த காட்சி பரவலானது. அப்போது மக்கள் பணியை செய்ய மக்களவை அனுப்பினால்  இப்படி தூங்கலாமா என்றார்கள். இப்போது பிரதமரே தூங்கி விழுந்திருக்கிறார். இதுக்காகவா பிரதமராக்கினோம் என பதிலடி கொடுக்கிறார்கள் காங்கிரஸர்.

இப்பொது டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரல் வீடியோ இவைதான்.

Leave A Reply

Your email address will not be published.