போக்குவரத்து காவலரை கொலைவெறி தாக்குதல் நடத்தி திருச்சி ஆவின் சேர்மன் தலைமைறைவு !

0 10

admk-Traffic-policeman-on-the-attack-on-the-head-of-the-palniyandiதிருச்சி ஜீயபுரம் கடைவீதியில் பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ்காரர் மீது குடி போதையில் கொலைவெறி தாக்குதல் நடத்திய திருச்சி ஆவின் தலைவர் அயிலை பழனியாண்டி மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவான அவரை தேடி வருகிறார்கள்.

கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகில் உள்ள திம்மாச்சிபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகன் சதீஷ்குமார்(வயது 31). இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து காரில் திருச்சி நோக்கி தனது நண்பருடன் சென்று கொண்டிருந்தார். காரை சதீஷ்குமார் ஓட்டி வந்துள்ளார்.

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே உள்ள அந்தநல்லூர் பகுதியில் கார் வந்து கொண்டிருந்தபோது, காரின் முன்னால் பதிவு எண் இல்லாத ஒரு கார் சென்றது. அந்த காரை சதீஷ்குமார் முந்தி செல்ல முயன்றார். அப்போது சதீஷ்குமார் ஓட்டி வந்த கார் பதிவு எண் இல்லாத புதிய காரின் மீது உரசியதாக கூறி ஜீயபுரம் கடைவீதியில் இரண்டு தரப்பினருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இரண்டு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

 அடிபட்ட காவலர் ஆத்மநாதனிடம் விசாரிக்கும் ஜீயபுரம் போலிஸ்
அடிபட்ட காவலர் ஆத்மநாதனிடம் விசாரிக்கும் ஜீயபுரம் போலிஸ்

இந்த சம்பவத்தை அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஜீயபுரம் போக்குவரத்து போலீஸ்காரர் ஆத்மநாதன் பார்த்தார். உடனே அவர் இரு தரப்பினரையும் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்ல முயன்றார். அப்போது ஜீயபுரம் கடைவீதியில் நின்று கொண்டிருந்த திருச்சி ஆவின் தலைவர் அயிலை பழனியாண்டி, தனது மருமகனின் நண்பரான சதீஷ்குமாரை போக்குவரத்து போலீஸ்காரர் ஆத்மநாதன் அழைத்து செல்வதை பார்த்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதற்கு போலீஸ்காரர் ஆத்மநாதன், கடைவீதியி¢ல் இரண்டு தரப்பினரும் அடித்து கொண்டிருந்ததால் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்கிறேன் என்று கூறி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆவின் தலைவர் அயிலை பழனியாண்டி, போலீஸ்காரர் ஆத்மநாதனின் கன்னத்தில் அடித்துகீழே தள்ளியுள்ளனார். அப்போது மயக்கம் அடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டுயிருக்கிறார்.
இந்த சம்பவம் நடந்து கொண்டு இருந்தபோது பதிவு எண் இல்லாத காரில் வந்தவர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடி விட்டனர். பின்னர் சதீஷ்குமார் ஓட்டி வந்த காரையும், காரில் வந்தவர்களையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

அரசுமருத்துவ மனையில் காவலர் ஆத்மநாதன்
அரசுமருத்துவ மனையில் காவலர் ஆத்மநாதன்

இதற்கிடையில் அடிவாங்கிய போலீஸ்காரர் ஆத்மநாதன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.  அவர் நம்மிடம் சொல்லும் போது.. ஆவின் சேர்மன் தன்னை தலைவர் என்று சொல்லிக்கொண்டு நான் சொல்றத கேட்க மாட்டியா ? என்று என் இரண்டு கைகளையும் கட்டி பிடித்துக்கொண்டு என்னுடைய இடுப்பிலும், வயிற்றிலும் மாறி மாறி குத்தி கீழே தள்ளிவிட்ட போது கீழே மயங்கி விழுந்தேன். கண் விழித்த போது மருத்துவமனையில் இருக்கிறேன். இப்போது என்னால் எழுந்து நிற்க முடியவில்லை என்னுடைய இடுப்பு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுயிருக்கிறது. அவர் நடவடிக்கை எடுக்க சொல்லி நான் ஜீயபுரம் காவல்நிலையத்தில் புகார் செய்திருக்கிறேன் என்றார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி ஜீயபுரம் இன்ஸ் பாலசந்திரன்  ஆவின் தலைவர் அயிலை பழனியாண்டி மீது 294 பி(தகாத வார்த்தைகளால் திட்டுதல்), 323(அடித்து காயம் ஏற்படுத்துதல்), 355(அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல்) ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த சம்பவத்திற்கு பின்னர் அயிலை பழனியாண்டி தலைமறைவாகி விட்டார். தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர். அயிலை பழனியாண்டி அந்தல்லூர் ஒன்றிய அ.தி.மு.க. அவைத்தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

உளவுத்துறை டி.எஸ்.பி ஸ்ரீதா் அரசு மருத்துவமனையில் வந்து பாதிக்கப்பட்ட போலிஸ்காரரை விசாரித்த பிறகே சம்பவம் உண்மை என்று அறிந்த பிறகே வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.