இறந்தபிறகும் இந்திய மாணவர்களின் கல்விக்கு உதவும் அப்துல்கலாம்

0 4

abdul-kalam-candleஅமெரிக்காவின் தெற்கு புளோரிடா பல்கலைக் கழகம், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பெயரில், இந்திய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, விருது வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.

இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், 2012ல் அமெரிக்காவின் தெற்கு புளோரிடா பல்கலையில், மாணவர்களிடையே உரையாற்றினார். பசுமை எரிசக்தியின் அவசியம் பற்றியும், தொடர்ந்த, நீடித்த வளர்ச்சியை உலக நாடுகள் தங்கள் வளர்ச்சித் திட்டங்களில் கொள்கையாக எப்படி உருவாக்க வேண்டும், அமல்படுத்த வேண்டும் என்பது பற்றியும் பாடம் எடுத்தார்.

அப்போது அப்துல்கலாமுக்கு உதவியாக அவரது அறிவியல் ஆலோசகர் வெ.பொன்ராஜூம் இருந்தார். இந்நிலையில், அப்துல்கலாமின் நினைவைப் போற்றும் வகையில், அவரது பெயரில் கல்வி உதவித்தொகை மற்றும் விருதுகளை, அமெரிக்காவிற்கு படிக்க வரும் இந்திய மாணவர்களுக்கு வழங்குவது என்று தெற்கு புளோரிடா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு புளோரிடா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் ரோஜர் பிரைன்ட்லி, டாக்டர் அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் வெ.பொன்ராஜிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் ரோஜர் பிரைன்ட்லி

இந்தியாவும், இந்த உலகமும், ஒரு மிகப்பெரிய மகானை இழந்து தவிக்கிறது. அந்த துன்பத்தில், அமெரிக்காவின் தெற்கு புளோரிடா பல்கலையும் தன்னை இணைத்துக் கொள்கிறது.

அவரை இழந்து வாடும் இந்திய மக்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அதே நேரத்தில், அவரது லட்சியங்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் உங்களின் முயற்சியையும், அவரது குடும்பத்தினரின் முயற்சியையும் பாராட்டுகிறோம்.

எங்கள் சமூகம், அப்துல் கலாமின் மிகச் சிறப்பான வாழ்வை, அவரது மதிநுட்பத்தை, எளிமையான, அறிவார்ந்த, அமைதியான உலக சமூகத்தை உருவாக்குவதற்கு அவர் பாடுபட்ட விதத்தை எப்படி நினைவுகூர்வது என நினைத்தோம்.

அதனால், தெற்கு புளோரிடா பல்கலைக் கழகத்தில், அப்துல் கலாம் பெயரில், சில செயல்களை செய்வது என  தீர்மானித்துள்ளோம். அப்துல் கலாம் பட்ட மேல்படிப்பு கல்வி உதவித்தொகை வழங்குவது.

இதன் மூலம் இந்திய மாணவர்களுக்கு, நான்கு ஆண்டு மேல்படிப்பிற்கு, 56 லட்சம் ரூபாய் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும். அத்துடன், ஆண்டுதோறும், 12 லட்சம் ரூபாய் கல்வி ஊக்கத்தொகையாக வழங்கப்படும்apj-abdul-kalam-with-students

அப்துல் கலாம் விருது, 2016 – 17ல் இருந்து சிறந்த மாணவர்களுக்கு வழங்கப்படும். இந்த விருது, இப்பல்கலையில், அறிவியல் மற்றும் பொறியியலில், பிஎச்.டி., படித்து சாதனை படைக்கும் இந்திய மாணவர்களுக்கு வழங்கப்படும்

அப்துல் கலாமைப் போல், நீங்களும் கல்வியின் மேன்மையை வலியுறுத்தி வருகிறீர்கள். உங்கள் செயல்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், இந்திய மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு, தெற்கு புளோரிடா பல்கலையும் அந்த பணியில் இணைத்துக் கொள்வதில் பெருமை அடைகிறோம்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.