திருச்சி மேயர் அறையில் கணவருடன் சேர்ந்து நடத்தும் பஞ்சாயத்து ! அதிர்ச்சியில் மாநகராட்சி ஊழியர்கள்! ( படங்களுடன் )

0 31
municipal-corporation
திருச்சி மாநகராட்சி முகப்பு

திருச்சி மாநகராட்சியில் உள்ள ஊழியர்கள் ( 30.11.2015 ) இன்று 50 பேருக்கு மேல்எங்களுக்கு வழங்க வேண்டிய பதவி உயர்வு 1 வருடத்திற்கு மேல் ஆகியும் இன்னும் வழங்கப்படவில்லை. உடனே வழங்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்கள். அது ஆர்பாட்டமாக மாறுகின்ற சுழ்நிலையில் மேயர் ஜெயாவும் அவருடைய கணவர் எம்.எஸ். ராஜேந்திரனும் காரில் உள்ளே வந்தனர்.

நாம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களிடம் பேசிய போது.. இந்த மாநகராட்சியில் சுமார் 40 பேருக்கு மேல் பதவி உயர்வுக்கு தயாராக இருந்தும் கடந்த ஒன்னரை வருடங்களாக பதவி உயர்வு வழங்காமல் இழுத்தடித்துக்கொண்டே இருக்கிறார்கள். இதை செய்ய வேண்டிய பொறுப்பு மாநகராட்சியின் நியமனகுழுவின் பொறுப்பு இதற்கு மாநகராட்சியின் கமிஷனர் விஜயலெட்சுமி, மற்றும் மேயர் ஜெயா, மற்றும் கவுன்சிலர் ஜெரால்டு ( சினிமா நடிகர் அலெக்ஸ் மருமகன் ) உறுப்பினர் இவர்கள் 3 பேரும் சேர்ந்து இந்த கமிட்டி கூடி கையெழுத்து போட வேண்டியது தான் பாக்கி.

அரசு உத்தரவு போட்டு ஒன்னரை வருடம் ஆகியும் இவர்கள் இழுத்தடித்துக்கொண்டே இருக்கிறார்கள். மேயரும் கமிஷனரும் சரி என்று ஒத்துழைத்தாலும் கவுன்சிலர் ஜெரால்டை மட்டும் சந்திக்கவே முடியவில்லை என்று அவரை வீட்டில் சந்திப்பதற்காக மாநராட்சியில் ஊழியர்களில் முக்கியமான சிலர் மட்டும் அவரை சந்திக்க மரியம் நகரில் உள்ள அவருடைய வீட்டிற்கு சென்றோம்.16sept_tysgnns05_ma_784298e

வீட்டிலிருந்து வெளியே வந்த அவர்… யாரை கேட்டு இங்கே வந்தீங்க, என்னிடம் அனுமதி வாங்கிட்டு வந்தீங்களா? என்று விரட்டாத குறையாக என்ற மிரட்டி அனுப்பிவிட்டார்.

என்னாடா எங்களுக்கு சலுகை செல்ல வேண்டிய கவுன்சிலரே இப்படி நடந்து கொள்கிறார் என்றால் இவரை ஒட்டுபோட்டு கவுன்சிலாக தேர்ந்தெடுத்த மக்களுக்கு இவர் என்ன செய்து இருப்பார் என்று நினைத்து கலங்கி எங்களுடைய மாநில செயலாளர் சண்முகம் அவர்களிடம் புகார் செய்தோம்.

IMG_9270
திருச்சி மாநராகட்சியின் முன்பு ஆர்பாட்டத்தில் மாநகராட்சி ஊழியர்கள்.

நாங்கள் அவரிடம் சொல்வதற்குள்ளாகவே கவுன்சிலர் ஜெரால்டு எங்கள் தலைவருக்கு போன் பண்ணி! என்னை யாருன்னு நினைச்சே! என்னுடைய பலம் என்னான்னு உனுக்கு தெரியனுமா ? ஆளுங்களா வச்சு என்னை மிரட்டி பாக்குறீயா என்று ஒருமையில் பேச ஆரம்பித்துவிட்டார்.

அதற்கு எங்க தலைவர் உங்களை சந்திக்க வீட்டுக்கு எங்க உறுப்பினர்கள் வந்தது தப்பா? இதற்கு ஏன் இவ்வளவு கோபப்படுகிறீர்கள் என்று கேட்டு  தான் பிறகு இப்படியே விட்டால் நியாயம் கிடைக்காது என்று தான் இப்போது நாங்கள் கோஷம் போட்டோம் என்று தங்களின் பரிதாப நிலையை விளக்கிறானார்.

நம்மிடம் பேசிக்கொண்டுயிருக்கும் போதே ஆர்பாட்டம் நடத்தின அனைவரையும் மேயர் ஜெயா உள்ளே அழைக்கிறார் என்று அனைவரும் ஆர்வத்துடன் தங்ளுக்கு ஒரு விடிவு காலம் என்று மாநகராட்சிக்குள் சென்றனர்.

ஜெரால்டு மில்டன்
 ஜெரால்டு மில்டன்

நாமும் அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதை அறிவதற்காக நாம் காத்திருந்திருந்தோம். சுவற்றில் அடித்த பந்து போல உள்ளே சென்றவர்கள் திரும்பி வந்தனர்..

என்னாச்சு சார்.. நாம் அவர்களிடம் பேசிய போது.. சார்… உள்ளே போனோ மேயர் பக்கத்தில் அவருடைய கணவர் எம்.எஸ்.ரஜேந்திரன் உட்கார்ந்துயிருக்கார் சார்.. இது என்ன சார்.. அநியாயமா இருக்கு !.. மேயரை பார்க்க போன மேயர் கணவர் என்ன சொல்றாரோ அதை கேட்டு அப்படியே இவர் எங்கிட்ட சொல்றார் சார்!…

திருச்சி மேயர் ஜெயாவும் - அவருடைய கணவர் எம்.எஸ். ரஜேந்திரன் மாநகராட்சி ஊழியர்களிடம் பேசும் போது...
திருச்சி மேயர் ஜெயாவும் – அவருடைய கணவர் எம்.எஸ். ரஜேந்திரன் மாநகராட்சி ஊழியர்களிடம் பேசும் போது…

அப்படி என்ன தான் சொன்னார்னு ஆர்வத்துடன் கேட்டோம்…. ரோட்டுல நின்னு யார்கிட்டே பதவி உயர்வு வேணும்னு கேட்டீங்களோ ?                                                          

அவுங்கிட்டையே கேளுங்க, எங்க கிட்ட ஏன் கேட்கிறீங்கன்னு மேயர் வீட்டுகாரர் சொன்னதை அப்படியே கிளிபிள்ளை மாதிரி மேயரும் எங்க கிட்டே சொல்றாங் சார்… இந்த அநியாயத்தை எங்க சார் போய் சொல்றது… என்று அதிர்ந்து போய் நம்மிடம் சொன்னார்…

அதிரடி நடவடிக்கையில் சிறப்பிடமாக செயல்படும் தமிழக அரசு.. உடனே இவர்களின் பிரச்சனையில் தலையிட்டு இவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா ? என்பதே இப்போது மாநகராட்சியின் ஊழியர்களின் ஆதங்கமாக இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.