பட்டிமன்றமான லோக்சபா

0 3

lok-sabha-speaker_2நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கு வேலைவாய்ப்பின்மை, பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு, வறுமை, நாட்டின் பாதுகாப்பு, தனி நபர் வருமானம் என்று எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும் இடத்தில் அவற்றை பற்றி பேச நேரம் ஒதுக்காமல் தற்போது நாட்டில் சகிப்புதன்மை இருக்கா இல்லையா என்ற பட்டிமன்ற தேவையா? என்று பல இளைஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற லோக்சபா பட்டிமன்றத்தை பார்ப்போம்

நாட்டில் நிலவும் சகிப்புத்தன்மையின்மை குறித்து விவாதிக்க வேண்டும் என இடது சாரி உள்ளிட்ட எதிர்கட்சியினர் விடுத்த கோரிக்கையை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்று கொண்டார். இதனையயடுத்து கேள்வி நேரம் முடிந்து 12 மணிக்கு லோக்சபாவில் விவாதம் துவங்கியது .கடந்த 26ம் தேதி துவங்கிய பார்லி., கூட்டத்தில் முதலில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது . தொடர்ந்து இந்திய அரசியலமைப்பு தினம் குறித்து உரை நிகழ்ந்தது, இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், காங்., தலைவர் சோனியா மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் உரை நிகழ்த்தினர்.6cd16b541da396b3ae2da9c098d94deb

தொடர்ந்து இன்று பார்லி., இரு அவைகளும் துவங்கியது. ராஜ்யசபாவில் அரசியலமைப்பு தினம் குறித்து உரை நடந்தது .லோக்சபாவில் , விலை வாசி உயர்வு குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் இடதுசாரி தரப்பில் சகிப்புத்தன்மையின்மை குறித்து விவாதிக்க வேண்டும் , இதற்கென கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க வேண்டும் என சபாநாயகரிடம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இருப்பினும் கேள்வி நேரம் முடிந்ததும் இது குறித்து விவாதிக்கப்படும் என சபாநாயகர் அறிவித்தார்.
எந்த பிரச்னையானாலும் விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக பார்லி, விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு அறிவித்தார் . ஒரே நேரத்தில் ஒரு பிரச்னை குறித்து விவாதிக்க முடியாது ஒவ்வொன்றாக விவாதித்து கொள்ளலாம் என்றார் .

தொடர்ந்து கேள்வி நேரம் முடிந்ததும் மதியம் 12 .15 க்கு சகிப்புத்தன்மையின்மை குறித்து விவாதிக்க பிரிவு 193 படி சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனுமதி அளித்தார். சி.பி.ஐ.எம். கட்சி தரப்பில் முகம்மது சலீம் என்பவர் முதன் முதலாக பேச்சை துவக்கினார். நாட்டில் சகிப்புத்தன்மையின்மை நிலவி வருவது அபாயகரமானது. இந்தியா ஜனநாயகநாடு , பாசிச நாடு அல்ல, இவை நிறுத்த வேண்டும் .800 ஆண்டுகளுக்கு பின்னர் இந்து பிரதமர் ஒருவர் ஆட்சி பொறுப்பேற்றுள்ளார் என ராஜ்நாத்சிங் கூறியுள்ளார் . இதற்கு சலீம் கண்டனம் தெரிவிக்கிறேன்.என பேசி கொண்டிருக்கும் போது எழுந்து. அதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்நாத்சிங், சலீம் தவறான தகவலை தருகிறார். இதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் சலீம் மன்னிப்பு கேட்க மறுத்து விட்டார் . இந்நேரத்தில் அவையில் சல சலப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.