டெஸ்ட் தரவரிசை பட்டியலில் 2ஆம் இடத்தை பிடித்த அஸ்வின்

0 14

ashwin_650_042614121141இன்று வெளியிடப்பட்டுள்ள ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில், பவுலர்களில் அஸ்வின் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் அஸ்வின் 12 விக்கெட்டுகள் எடுத்தார். இதற்கு முன்பு அவர் தரவரிசைப் பட்டியலில் 5-ம் இடத்தில் இருந்தார். ஆனால் 3-வது டெஸ்டுக்குப் பிறகு அவர் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். முதல் இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின் உள்ளார். ஜடேஜாவுக்கு 11-ம் இடம் கிடைத்துள்ளது.

டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் முரளி விஜய் 12-ம் இடத்தில் உள்ளார். புஜாரா மற்றும் கோலி ஆகியோர் முறையே 15, 16-ம் இடங்களில் உள்ளார்கள். முதல் இடத்தில் இருப்பவர், இங்கிலாந்தின் ரூட்! முதல் இடத்தில் இருந்த டிவில்லியர்ஸ், 3-ம் இடத்துக்குப் பின்தங்கியுள்ளார்.

இந்திய அணி 4-ம் இடத்தில் உள்ளது. கடைசி டெஸ்ட்டையும் இந்திய அணி ஜெயித்துவிட்டால் டெஸ்ட் தரவரிசையில் 2-ம் இடத்தைப் பிடிக்க வாய்ப்புண்டு. முதல் இடத்தில் தென் ஆப்பிரிக்கா உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.