பெல் நிறுவனத்தில் லேப் டெக்னீசியன், கிளார்க், பொறியாளர் பணி

0 2

belமத்திய அரசின்கீழ் மகாராஷ்டிரா  புனேவில் செயல்பட்டு வரும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் பெல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள லேப் டெக்னீசியன், கிளார்க், தொழில்நுட்பவியலாளர் மற்றும் பொறியியல் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்னப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 31

1. Deputy Engineer (Electronics)- 04

2. Deputy Engineer (Mechanical)- 11

3. Lab Technician-C- 02

4. Technician-C- 06

5. Clerk-cum-Computer Operator-C- 04

6. Engineering Assistant- 04

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன் போன்ற பொறியியல் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

லேப் டெக்னீசியன்-சி பணிக்கு இயற்பியல், ஒளியியல் பிரிவில் பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.

டெக்னீசியன்-சி பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்து 1 ஆண்டு அப்ரண்டீஸ் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

கிளார்க் பணிக்கு பி.காம் முடித்திருக்க வேண்டும். கணினி துறையில் MSCIT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பொறியியல் உதவியாளர் பணிக்கு பொறியியல் படிப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 01.11.2015 தேதியின்படி  பொது பிரிவினருக்கு 28-க்குள்ளும், பிற்பட்டோருக்கு 31-க்குள்ளும், SC / ST பிரிவினருக்கு 33-க்குள் இருக்க வேண்டும். மாற்றுதிறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500, மற்ற பிரிவினருக்கு ரூ.300. இதனை Bharat Electronics Limited  என்ற பெயருக்கு புனேவில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Dy. General Manager (HR& A),

Bharat Electronics Limited, NDA Road,

Pashan, Pune – 411021 (Maharashtra)

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:09.12.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://bel-india.com/sites/default/files/Recruitments/ShortTermEngers.-BEL-webAD-24.11.2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave A Reply

Your email address will not be published.