ஆக்ரோசமாக நடிக்கும் விஜய்-தெறி திரைப்படம் தெறிக்கவிடுமா ?

0 2

theriவிஜய் நடித்து அட்லி இயக்கும் படத்திற்கு தலைப்பு வைக்காதது தலையாய பிரச்சினையாக இருந்து வந்தது. ஆனா இப்போ ரீசெண்டா தலைப்பு வைத்தும் பிரச்சினை வேறு ரூபங்களில் உருவாகி வருகிறது.இது ‘வேதாளம்’ படத்தில் இருந்து எடுக்கப்பட்ட வார்த்தை என்று அஜித் ரசிகர்கள் கூறிவருகின்றனர். அப்படி பார்த்தால் ‘வேதாளம்’ டைட்டில் புலி படத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்று விஜய் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

ஆனால் தெறி படத்தின் பர்ஸ்ட் லுக் எல்லோரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால், படக்குழு மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது.இதுக்குறித்து பேசிய அட்லீ ‘இப்படம் திடீரென்று ஆரம்பிக்கப்படவில்லை, ராஜா ராணி முடிந்தவுடன் விஜயை சந்தித்தேன். அதன் பிறகு மூன்று முறை நாங்கள் சந்தித்து சந்தித்து கதை குறித்து பேசினோம்.

இந்த படத்திற்கான வேலையை ஆரம்பிக்கும் போதே விஜய் என்னிடம், இந்தபடம் எல்லோரும் குடும்பம் குடும்பமாக பார்க்க வேண்டும் என்றார், அவர் கூறியது போல் குடும்பமாக ரசிக்கும் படமாக இது இருக்கும் என்றவர்,

இது இப்படி இருக்க, மலையாளத்தில் தெறி என்றால் மிக மோசமான வார்த்தை என்பதால் கேரளாவில் விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  ஆனால் இதை கண்டுகொள்ளாத விஜய்யின் தெறிப்படக்குழு, ‘தெறி’ படத்தின் தெலுங்கு பதிப்புக்கு ‘மெருபு’ என்று பெயர் சூட்டியுள்ளனர்.

அங்கு சர்ச்சை கிளம்பியுள்ளது, காரணம் தெலுங்கில் நடிகர்  சீரஞ்சிவியின் மகனுமான ராம்சரணின் ஒரு படத்திற்கும்   மெருபு  என தலைப்பு வைக்கப்பட்டு, படம் சூட்டிங் போன வேகத்தில் பாதியிலே நிறுத்தப்பட்டு விட்டது.  இதுமட்டுமல்லாமல்  இதற்கு முன்பு ‘மெருபு’எனும்  பெயரில் 1996 ல் நடிகர் ஆனந்த், கஸ்தூரி ஆகியோர் நடிப்பில் தெலுங்கில் ஒரு படம் வெளியாகியுள்ளது. இப்படம் தமிழில் ‘மிஸ் மெட்ராஸ்’ என்றும் ரீமேக் செய்யப்பட்டது.

இப்படி இருக்க, எதைபற்றியும் கவலைப்படாமல் ‘மெருபு’ பட தலைப்பை இப்போது தெறி திரைப்படத்திற்கு வைத்து எல்லோரையும் தெறிக்கவிட்டுள்ளார் விஜய்.

இந்நிலையில் இளைய தளபதி விஜய் எப்போதும் படப்பிடிப்பிற்கு வெளியே அமைதியாக தான் இருப்பார். ஆனால், நடிப்பில் அசத்திவிடுவார். தெறி படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவாவில் நடந்து வருகின்றது. அதிலும் முக்கியமான சண்டைக்காட்சி ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர் வடிவமைக்க, இளைய தளபதி இந்த சண்டைக்காட்சியில் மிரட்டி விட்டாராம். படக்குழுவே இவரின் ஆக்சனை கண்டு வியந்து உள்ளதாம்.

தெறி பட்டையை கிளப்பும் என்கிறார்கள் படக்குழுவினர்.

Leave A Reply

Your email address will not be published.