இளைஞர்களின் உழைப்பில் நிரம்பி வழியும் தண்ணீர் பந்தல் ஏரி-

0 3

jayangondam lake youth 1சீமை கருவேலம் மரங்கள் அடர்ந்து கிடந்த ஏரி இப்போது குளம் போல தண்ணீர் நிரம்பி நிற்பதை பார்த்து சந்தோசத்தில் துள்ளிக்குதிக்கிறார்கள் ஜெயங்கொண்டம் அருகே உள்ள புதுக்குடி கிராமவாசிகள்.

முந்திரிக்காடுகள் அடந்து காணப்படும் இந்த பகுதிகளில் சிலவருடங்களாக  மழையில்லாமல் வறண்ட பூமியாகிப்போனது. அதில் ஜெயங்கொண்டம் அருகிலுள்ள புதுக்குடி கிராமத்தில் உள்ள தண்ணீர் பந்தல் ஏரி சில வருடங்களாக வறண்டு மேடேறி, சீமைக்கருவை மண்டி தூர்ந்துபோய் கிடந்தது. இதைபார்த்து அமைதியாய் வேடிக்கைபார்க்காமல் அந்த ஊர் இளைஞர்கள் ஏரியை மீட்டெடுக்க முடிவு செய்து முதற்கட்டமாக சீமைக்கருவையை அகற்ற நினைத்து வேலையை துவக்கினர். இளைஞர்களுடம் அந்த ஊர் மக்களும் சேர்ந்துகொண்டு தங்கள் ஊர் ஏரிக்காக  மனித உழைப்பை தந்தனர்.jayangondam lake youth

ஒருகட்டத்தில் இயந்திர தேவை ஏற்பட்டபோத, நல்ல உள்ளங்களின் உதவியை நாடி  அவர்களின் உதவியுடன் ஏரி முழுவதும் சீரமைத்து கரைகளை உயர்த்தி, மரக்கன்றுகளை நட்டனர்.

தற்போது தமிழகத்தில் பெய்துவரும் கனமழையில் தண்ணீர் பந்தல் ஏரியில் தண்ணீர் நிரம்பி நிற்கிறது. இந்த ஏரியும் உள்ளது மழைத்துளி மட்டுமல்லீங்க. அந்த இளைஞர்களின் வியர்வைத்துளியும்தான் என்று பெருமை படுகிறார்கள் அந்த ஊர் இளைஞர்கள்.

jayangondam

Leave A Reply

Your email address will not be published.