கடலோர காக்கிசட்டையின் லீலைகள் – அம்பலமாக்கிய பெண்

0 2

Delhi-gang-rapeகுமரி மாவட்ட சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஒருவரின் செக்ஸ் லீலைகள் வெளியாகி பரபரப்பை உண்டாக்கி உள்ளது.குமரி மாவட்ட எல்லையோர  பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் இதுவும் ஒன்று. இந்த காவல் நிலைய பகுதியில் பிழைப்புக்காக வெளி மாநிலத்தை சேர்ந்த ஏராளமான  தொழிலாளர்கள் வந்து தங்கி உள்ளனர். இவர்கள் ஆங்காங்கே வீடுகளில் வாடகைக்கு வசித்து வருகிறார்கள். இப்படி பிழைப்புக்காக வந்து தங்கிய வட  மாநிலத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவரை, அந்த பகுதியை சேர்ந்த பெட்டிக்கடை நடத்தி வரும் பெண் புரோக்கர் ஒருவர் ஆசை வார்த்தைகள் கூறி  விபசாரத்தில் தள்ளியுள்ளார். இந்த விவரத்தை மோப்பம் பிடித்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பெட்டிக்கடை நடத்தி வரும் பெண்ணை தொடர்பு கொண்டார்.

உன்னை கைது செய்து உள்ளே தள்ள முடியும் என மிரட்டியுள்ளார். சிறப்பு சப் இன்ஸ்பெக்டரின் நோக்கத்தை தெரிந்து கொண்ட அந்த பெண் புரோக்கர்,  தன்னிடம் இருந்த வட மாநில பெண்ணை சிறப்பு சப் இன்ஸ்பெக்டருக்கு தாரை வார்த்தார். இதையடுத்து சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பலமுறை வட மாநில  பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அவரின் டார்ச்சர் தாங்க முடியாத அந்தப் பெண் அங்கிருந்தே எஸ்கேப் ஆகிவிட்டார். இந்த நிலையில் காவல்  நிலையத்தில் தகராறு செய்ததாக கைது செய்யப்பட்ட பெண் ஒருவருடன் சிறப்பு சப் இன்ஸ்பெக்டருக்கு பழக்கம் ஏற்பட்டது. முதலில் செல்போன் நம்பரை வாங்கி  பேச தொடங்கியவர், பின்னர் அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு ஊர் ஊராக சென்று லாட்ஜில் தங்கி உல்லாசமாக இருந்துள்ளார்.

இந்த விவகாரம் காவல்நிலைய இன்ஸ்பெக்டருக்கு தெரிய வந்தது. அதிர்ச்சியடைந்த அவர், சப் இன்ஸ்பெக்டரை அழைத்து  கண்டித்துள்ளார். ஆனால், அதை சிறப்பு எஸ்.ஐ. கண்டுகொள்ளவில்லை.  இதற்கிடையே கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்த இளம்பெண்ணை வலையில்  வீழ்த்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் லீலைகளை தொடங்கினார். வழக்கம் போல் செல்போன் நம்பரை வாங்கி காதல் மொழி பேசினார். ஆனால் இவரின் விபரீத  புத்தியை தெரிந்து கொண்ட இளம்பெண் அவரை திட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த எஸ்.ஐ., நேரடியாக அந்த இளம்பெண்ணிடம் தனது ஆசைக்கு இணங்குமாறு மிரட்டியுள்ளார். தற்போது இந்த விவகாரம்  இளம்பெண்ணின் உறவினர்கள் காதுக்கு எட்டியுள்ளது. ஆத்திரம் அடைந்த அவர்கள் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க உள்ளனர்.  இந்த  விவகாரம் பெரிதாக வெடிப்பதற்குள் சம்பந்தப்பட்ட சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.