வாட்ஸ் ஆப்பில் வலம் வரும் கபாலி பாடல் -கவலையில் ரஜினி

0 44

rajini kabaliரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கபாலி படத்தின் பாடல் ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது. பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே,தன்ஷிகா, கலையரசன், அட்டக்கத்தி தினேஷ் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி வரும் படம் கபாலி.

அட்டக்கத்தி, மெட்ராஸ் படங்களைத் தொடர்ந்து தனது 3 வது படத்திலேயே ரஜினிகாந்தை இயக்கும் அதிர்ஷ்டம் ரஞ்சித்திற்கு கிடைத்தது. சென்னையில் தொடங்கிய முதற்கட்டப் படப்பிடிப்பைத் தொடர்ந்து மலேசியாவில் படக்காட்சிகள் எடுக்கப்பட்டன.

அதனை அடுத்து பேங்காக்கில் படப்பிடிப்பு நடந்துமுடிந்தது. அடுத்தக்கட்டபடியாகப் படக்காட்சிகள் விரைவில் கோவாவில் எடுக்கப்படவிருக்கின்றன.

மலேசியாவில் நடைபெறுவது போல கதை அமைந்திருந்தாலும், இயக்குநர் ரஞ்சித் சரியாகத் திட்டமிட்டு சென்னையிலேயே மலேசியாவில் நடைபெறுவது போன்ற உள்ளரங்குக் காட்சிகளை எடுத்திருக்கிறார். இந்நிலையில் மலேசியாவில் படம்பிடிக்கப்பட்ட இப்படத்தின் பாடல் ஒன்று இணையதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

2நிமிடங்களைக் கொண்ட இப்பாடல் வாட்ஸ் ஆப் மூலமாக பகிரப்பட்டு வருகிறது. இதனைக் கேள்விப்பட்ட கபாலி படக்குழுவினர் அதிர்ச்சியில் உறைந்து இருக்கின்றனர். இதனால் கபாலி படத்தின் படப்பிடிப்பானது இனிமேல் பலத்த பாதுகாப்புடன் நடைபெறும் என்று தெரிகிறது. இந்த படத்தில் நடிக்கும் கலையரசன் தனது டுவிட்டர் பக்கத்தில்,

யாரும் தயவு செய்து கபாலி பாடல்களை பகிர வேண்டாம். இதனை புரிந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்குங்கள் என கூறியுள்ளார்.

இதற்கு முன்பாக விஜய்யின் புலி திரைப்பட பாடலும் மற்றும் அஜீத்தின் வேதாளம்  ஆகிய படங்களின் காட்சிகளும் இணையத்தில் வெளியானது. இப்போது கபாலி பாடல் வெளியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.