வளர்ச்சியில் தமிழகத்திற்கு  20வது இடம் இதுதான் ஜெயலலிதாவின் ஆட்சியின் சாதனை – விஜயகாந்த் காட்டம்

0 2

vijayakanthஅதிமுக ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சியை 20-வது இடத்திற்கு பின்னோக்கி கொண்டு சென்றது தான் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 கடந்த காலங்களில் தமக்கு சாதகமான ஆய்வுகள் ஊடகங்களில் வெளியான போதெல்லாம் சட்டமன்றத்தில் பெருமை பேசியவர் ஜெயலலிதா என்று கூறியுள்ளார்.

ஆனால் தமிழகம் அனைத்து துறைகளிலும் பின்தங்கி உள்ளதாக தற்போது வெளியாகியுள்ள ஆய்வு முடிவுகளை அவர் ஏற்க மறுப்பது ஏன் என்று விஜயகாந்த கேள்வி எழுப்பியுள்ளார். துறைவாரியான ஆய்வில் வேளாண்மை துறை 21&வது இடத்திற்கும், கல்வித்துறை 13-வது இடத்திற்கும், உள்கட்டமைப்பு வசதி 17-வது இடத்திற்கும் தள்ளப்பட்டு மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி 20-வது இடத்திற்கு சென்றுள்ளதாக வெளியான ஆய்வுகள் கவலை அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் வளர்ச்சி 20-வது இடத்திற்கு சென்றது குறித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மவுனம் சாதிப்பது ஏன் என்றும் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். இது போன்ற ஆய்வு முடிவுகளை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாமல் அவதூறு வழக்குகளை போட்டு உருட்டியும், மிரட்டியும் ஊடகங்களை முடக்க அதிமுகவினர் அராஜக செயல்களில் ஈடுபடுவதாக விஜயகாந்த் புகார் கூறியுள்ளார். தவறுகள் சுட்டிக்காட்டப்படும் போது அவற்றை திருத்திக்கொள்வதே ஒரு நல்ல அரசிற்கு அழகு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.