சர்ச்சை புத்தகம் – மத சண்டை !

0 2

christain-book.angusam.comகிறிஸ்துமஸ் அடுத்து புத்தாண்டு கொண்டாடி கிறிஸ்துவர்கள் மகிழ்ச்சியாக உள்ள இந்நேரத்தில்… “ஏசு கிறிஸ்து ஒரு கட்டுக்கதை’, “பைபிள் இறைமொழி அல்ல’ என்றெல்லாம் பலவிதமாக விமர்சித்து இயேசு கிறிஸ்துவின் உருவத்தை கோரமாக சித்தரித்ததோடு… ‘எல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்ல! ஆனால், எல்லா பயங்கரவாதிகளும் முஸ்லிம்களாக இருக்கிறார்களே!’என்றும் “கிறிஸ்துவம் மறைந் திருக்கும் உண்மை’’என்ற தலைப்பில் சர்ச்சைக் குரிய புத்தகத்தை இந்துமுன்னணி நிறுவன அமைப்பாளர் இராமகோபாலன் வெளியிட… சிறுபான்மை தலைவர்களின் மத்தி யில் சீற்றமும் கொந் தளிப்பும் ஏற்பட்டுள்ளது.

இந்த புத்தகத்தை தடை செய்ய வேண் டும். இயேசுகிறிஸ்துவை சாத்தான் போல் அட்டைப்படம் வெளி யிட்ட இராமகோ பாலனை கைது செய்ய வேண்டும் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணைய ரிடம் புகார் கொடுத்து போராடிவரும் கிறிஸ் துவ உரிமை இயக்கத் தின் தலைவர் ரெவ ரன்ட் டாக்டர். சாம் ஏசுதாஸ் நம்மிடம், “”ஒரு மதத்தை எவ் வளவு இழிவுபடுத்த வேண்டுமோ அவ்வ ளவு இழிவுபடுத்தி கிறிஸ்துவத்தின் ஆணி வேர் கொள்கைகளுக்கு முரணான -பல பொய் யான தகவல்களையும் புளுகுமூட்டைகளை அவிழ்த்துவிட்டிருக் கிறார்கள் இந்த புத்தகத்தில். பல அறிவியல்பூர்வமான தகவல்களை பல ஆண்டுகளுக்குமுன்பே சொல்லப் பட்டிருப்பதால்தான் பைபிளை ஒரு இறைமொழி என்கிறோம்.

பிரிட்டிஷ்காரன்தான் இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்தான். அதற்கு பிறகு வெளிநாட்டிலிருந்து வந்த கிறிஸ்துவ  மிஷனரிகளோ  ஒடுக்கப்பட்ட,  ஏழை- எளிய மக்க ளுக்காக கல்விநிறுவனங்களையும் மருத்துவமனை களையும் கட்டி சேவையாற்றினார்களே தவிர வியாபாரம் செய்ய வரவில்லை.

கிறிஸ்துவர்கள் மதமாற்றம் செய்கிறார்கள்  என்று தவறாக சொல்லப்படுகிறது. காரணம், ஜெயலலிதாவின் ஆட்சியில் மதமாற்றத் தடைச்சட்டம் அம லில் இருக்கும்போது கூட மதமாற்றம் செய்த தாக உண்மையான புகார் எங்குமே பதிவு செய்யப்படவில்லை. இயேசு உயிர்த்தெழவில்லை என்றால் இவ்வளவு மக்கள் அவரை வணங்குவார்களா? அவர் பிறப்பதற்கு முன்பே அவரது உயிர்த்தெழுதல் பைபி ளில் எழுதப்பட்டுள்ளது.

பொதுமக்களிடம் விஷ  விருட்சத் தை பரப்பும் விதமாக “ஜீசஸ் கிறிஸ்ட்-ஏ மித்- பைபிள்- நாட்   த வோர்ட்ஸ் ஆஃப் காட்’ என்ற புத்தகத்தை ஆங்கிலத்தில் எழுதிய ஆந்திராவைச் சேர்ந்த விஷ்ணு வரதனையும், அதை தமிழாக்கம் செய்த சக்கரத்தாழ்வார் என்பவரையும் இதை வெளியிட்ட இந்துமுன்னணி  நிறுவன அமைப்பாளர் இராம கோபாலனையும் கைது செய்யும்வரை எங்களது போராட்டம் ஓயாது”’என்று கொந்தளிக்கிறார் அவர்.

சிறுபான்மை கமிஷனின் முன்னாள் தலைவரும் இந்திய சமூக நீதி இயக்கத்தின் நிறுவனத்தலைவருமான இ.சி.ஐ. திருச்சபைகளின் பிரதம  தலைமை பேராயர் எஸ்றா சற்குணத்தின் குரலில் அனல் பறக்கிறது. “”வரலாற்றின் நடுநாயகனான இயேசுகிறிஸ்துவை கி.மு.(கிறிஸ்து பிறப்பதற்கு முன்), கி.பி. (கிறிஸ்து பிறப்பதற்கு பின்) என்று இயேசுவை மையமாக வைத்துதான் சரித்திரமே இருக்கிறது. அன்னை தெரசா என்பவர் மதமாற்றம் செய்யத்தான் தனது தொண்டுநிறுவனத்தை தொடங்கினார் என்று புத்தகத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

உண்மையில் அன்னை தெரசா ஒரு கிறிஸ்துவ மத பிரசங்கியோ போதகரோ அல்ல. அவர் ஒரு சாதாரண கிறிஸ்துவ  விசுவாசிதான்.  கல்கத்தாவில் ஆதரவற்றுக்கிடந்த குழந்தைகளை யும்… பார்த்தாலே பாவம் என்று மக்களால் வெறுத்து ஒதுக்கி வைக்கப்பட்ட குஷ்டரோகிகளையும்  பார்த்து மனமிரங்கித்தான் தொண்டுநிறுவனத்தையே தொடங்குகிறார். ஒதுக்கப்பட்ட அந்த நோயாளிகளை கழுவித்துடைத்து தொண்டாற்றியது உலகறிந்தது. எந்த ஒரு கிறிஸ்துவ தொண்டு நிறுவனத்திடமும் அவர் உதவி கேட்கவில்லை. இவருக்கு தனிப்பட்ட சர்ச்சுகூட கிடையாது. அன்னை தெரசா யாருக்காவது ஞானஸ்நானம் கொடுத்து மதம் மாற்றினார் என்று ஒரு நபரை சுட்டிக்காட்டினால் எனது பேராயர் பட்டத்தையே துறந்துவிடுகிறேன்”’ என்கிறார் சவாலாக.

புதுவாழ்வு மக்கள் கட்சியின் மாநிலத்தலைவர் எஃப்.ஏ. நாதன், “”மேரி பரிசுத்த ஆவி மூலம் கருத்தரித்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று இவர்கள் எப்படி சொல்லமுடியும்? கிறிஸ்துவர்களுக்கு பைபிள்தான் ஆதாரம். அதனால்தான் உலகத்திலேயே அதிக பிரதிகள் விற்பதில் பைபிள் முதலிடத்தில் இருக்கிறது. இயேசு பிறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே மீகா 5:2 வசனம் எண்ணாகமம் 27:14  மற்றும் ஏசாயா தீர்க்கதரிசி 7:14 வசனங்களில் அவர்  எப்படி பிறப்பார்? எங்கு பிறப்பார்? அவர் பிறக்கும்போது விடிவெள்ளி நட்சத்திரம் தோன்றுவது என்பன போன்ற பல ஆதாரங்கள் மிகத்தெளிவாக இருக்கிறது.  பைபிளில். ஆன்மீகத்தின் முதல் போராளி இயேசு கிறிஸ்துதான். ஒருவருடைய உருவத்தை பழிப்பதே இழிவான செயல்”’என்கிறார் வேதனையோடு.

மனிதநேய மக்கள் கட்சியின் நிறுவனர் அப்துல் சமது, “”பிறப்பால் யாரும்  உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் இல்லை என்று போதித்த  இஸ்லாம் மதம்  வெகுவாக வளர ஆரம்பித்தது. இப்படி பரப்பிய காரணத்தால்  பாதிக்கப்பட்டது யார் என்றால் வர்ணாசிரம சித்தாந்தங்களால் ஒடுக்கிக்கொண்டிருந்த பார்ப்பனியம்தான். மனிதர்களை பிரித்து அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்று நினைப்பவர்களுக்குத்தான் முஸ்லிம்கள் தீவிரவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் தெரிகிறார்கள்.

தவறான கருத்துகளை வெளியிடும் புத்தகங்களை கண்காணித்து  அரசு உடனே தடை செய்ய வேண்டும்”’என்கிறார் கோரிக் கையாக.

இந்த சர்ச்சைக்குரிய புத்த கத்தை வெளியிட்ட இந்துமுன்னணி நிறுவன அமைப்பாளர் இராம கோபாலனை தொடர்புகொண்டு இதுகுறித்து கேட்டபோது, “”இந்த நாட்டை கிறிஸ்துவ நாடாக்கும் முயற்சியில்தான் எல்லா இந்துக் களையும் மதமாற்றம் செய்து கொண்டிருக்கிறார்கள் கிறிஸ் துவர்கள். இதை தடுக்கும் தற் காப்பாகத்தான் இந்த புத்தகத்தை வெளியிட்டுள்ளேன்”’என்றவரிடம், “பயங்கரவாதிகள் எல்லோ ருமே முஸ்லிம் களாக இருப்பதாக சொல்லியிருக் கிறீர்களே?’ என்று கேட்டால்  “””முஸ்லிம்கள் எல்லோருமே தவ றானவர்கள்னு சொல்லல. ஆனா, பயங்கரவாதிகளின் லிஸ்டை எடுத்துப்பாருங்க. கைப்புண்ணுக்கு கண்ணாடி எதுக்குங்க?”’என்று கேள்வி எழுப்புகிறார்.

எந்த மதத்தினராக இருந்தாலும் சரி… அவரவர்களின் மதத்தினை போற்றுவதை விட்டுவிட்டு அடுத்தவர்களின் மதத்தை தூற்ற ஆரம்பித்தால் ஒற்றுமையில் வேற்றுமைதான் உண்டாகும்.

ஒற்றுமைப்படுத்த வேண்டி யது அரசின் கையில்தான் உள்ளது.

நன்றி – நக்கீரன்

Leave A Reply

Your email address will not be published.