வரிப்பணம் அரசாங்கத்திற்கு செல்லவில்லை ?- சென்னை வெள்ளம் குறித்து நடிகர் கமல் காட்டம்!

0 12

kamalhaasan-helmetவரிப்பணம். அரசாங்கத்திற்கு செல்லவில்லை ?-  சென்னை வெள்ளம் குறித்து கமல் காட்டம்!

சென்னை மழை வெள்ளம் பாதிப்பு குறித்து நடிகர் கமல்ஹாசன் கவலையுடனும், சற்று காட்டமாகவும் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது…

பாதுகாப்பான ஒரு அறையில் இருந்து கொண்டு ஜன்னல் வழியாக சென்னை மக்கள் மழை-வெள்ளத்தில் அவதிப்படுவதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறேன். இதை பார்க்கும் போது வெட்கமாக உள்ளது.

 தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கே இந்த நிலை என்றால், மற்ற ஊர்களை பற்றி சொல்ல வேண்டியதில்லை.

 பணக்காரர்கள் பிறர்படும் துன்பத்தை எண்ணி வெட்கப்பட வேண்டும்.

 நான் பெரிய பணக்காரன் இல்லையென்றாலும் ஒன்றும் செய்ய முடியாமல் வேடிக்கை பார்ப்பது வெட்கத்தை உண்டாக்குகிறது.

மழையால் ஒட்டுமொத்த சென்னையும் நிலை குலைந்து போய் உள்ளது. சென்னையில் மழை நின்றாலும் இதிலிருந்து மீண்டு வர இன்னும் பல மாதங்கள் ஆகும்.

 மக்களின் வரிப்பணம் என்ன ஆனது என்றே தெரியவில்லை.

 நான் கருப்பு பணம் வைத்திருக்கவில்லை, உழைத்து சம்பாதித்த பணத்திற்கு முறைப்படி வரி செலுத்தி வருகிறேன்.

 இதையெல்லாம் பார்க்கும்போது வரிப்பணங்கள் எதுவும் உரியவர்களுக்கு போய் சேரவில்லை என்று தெரிகிறது.

மழை போன்ற இயற்கை பேரழிவுகள் வந்தால் உடனே எங்களை போன்றவர்களிடமிருந்து நிதியுதவி எதிர்பார்க்கிறது அரசு.

அரசோடு ஒப்பிடுகையில் நான் குறைவாகத்தான் சம்பாதிக்கிறேன்.

நான் சம்பாதிப்பது குறைவு தான் என்றாலும் கொடுக்க வேண்டியது என் கடமை என்பது எனக்கும் தெரியும்.

 கண்டிப்பாக நான் உதவி செய்வேன். ஆனால் இது மக்களின் ரத்தத்தை உறிஞ்சிய பணக்காரர்களின் பணம் அல்ல, உண்மையிலேயே மக்கள் நேசிக்கும் ஒருவனின் பணம்.

அரசு எல்லோரையும் ஒன்றாக நடத்தினால் ஏழை, பணக்காரன் பேதம் ஒழிந்து போகும்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.