தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் 5 பேர் பலி

0 10

92ff0b25e5cff138aef8b781ca9ee984_Lநாமக்கல் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை பாலத்தின் தடுப்புச்சுவரில் கார் மோதிய விபத்தில் பொறியாளர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

சேலம் சீலநாயக்கன்பட்டி காஞ்சிநகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்நாதன்(35), பொறியாளர். இவருடைய மனைவி கற்பகம்(28). இவர்களுடைய 1 வயது குழந்தை ஸ்ரீவிசா. செந்தில்நாதனின் தாய் கீதா(52), நண்பர் சுரேஷ்(35). இவர்கள் 5 பேரும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு சாமி கும்பிடச்சென்றனர்.

பின்னர் அவர்கள் வியாழக்கிழமநை இரவு காரில் ஊர் திரும்பினர். காரை செந்தில்நாதன் ஓட்டி வந்தார். வெள்ளிக்கிழமை அதிகாலை நாமக்கல் நல்லிபாளையம் புறவழிச்சாலை அருகே  வந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையில் இருந்த சிறு பாலத்தின் தடுப்புச்சுவர் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த செந்தில்நாதன், கற்பகம், ஸ்ரீவிசா, கீதா, சுரேஷ் ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் நல்லிபாளையம் போஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

பலியான 5 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி, காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஆர்.செந்தில்குமார் அரசு மருத்துவமனைக்கு வந்து போலீஸாரிடம் விபத்து குறித்து கேட்டறிந்து, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

இந்த விபத்தில் இறந்த கீதாவின் கணவர் தண்டபாணி மருத்துவர். இவர் சேலம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். விபத்து குறித்து நல்லிபாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.