சென்னை மட்டுமே தமிழகம் என்று நினைத்த ஊடகங்கள் மற்றும் ஆட்சியாளர்கள்

0 22

Cuddalore_crop_2631199fதமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் கடலூர், சென்னை, பாண்டிசேரி, காரைக்கால், நாகை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் சென்னை மட்டும் தான் பாதிக்கப்பட்டதாக ஒளிபரப்பு செய்த ஊடகங்கள் காட்டியதே தவிர அளவுக்கு அதிகமான பாதிப்புகள் கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது என்பதை காட்ட மறந்து விட்டது. சென்னை மட்டுமே சுற்றி பார்த்த தமிழக முதல்வர் கடலூரை மறந்துவிட்டார். சென்னையில் எல்லா வசதிகளும் இருப்பதால் மீட்;பு பணிகள் நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டத்தின் நிலை கேள்வி குறிதான்? 126350
கடலூர் மாவட்டமும் தமிழகத்தில் தான் உள்ளது என்பதை நம்முடைய அமைச்சர்கள் மறந்துவிட்டனர். அட அவர்களுக்கு நிவாரண பொருட்களில் முதலமைச்சர் படம் பொறிக்கப்பட்டுள்ளதா என்பதை பார்க்கவே நேரம் போத வில்லையாம் அப்புறம் எப்படி கடலூரை கவனிப்பார்கள் என்று பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள மக்களின் கேள்வியாக உள்ளது.
சென்னையை மட்டும் சுத்தி சுத்தி காட்டிய மீடியாக்களே நீங்க எங்க போனீங்க இல்ல உங்க செய்தியாளர்கள், ஒளிபதிவாளர்கள் எல்லாம் எங்கே போனாங்க சென்னையை மட்டுமே நீங்கள் தமிழகம் என்று நினைத்து கொண்டீர்களா? கடலூர், நாகை, பாண்டிசேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் நாங்களும் இந்திய நாட்டு பிரஜைகள் தான், நாங்களும் ஓட்டு போட்டும் உரிமை உள்ளவர்கள் தான். எங்களை மட்டும் கண்டு கொள்ளமால் விட்டது ஏன் என்ற கேள்விக்கு எந்த ஊடகமாவது பதில் சொல்ல தயாரா?
சென்னையில் இருப்பவர்கள் மட்டும் தான் மனிதர்களா? நாங்கள் எல்லாம் சாவுரதா?

Leave A Reply

Your email address will not be published.