உங்களுடன் திருச்சி – நிவாரண பணியில் ஈடுபட்ட குழு

0 9

trichy withu you flood relief fundsதிருச்சி உங்களுடன் கூட்டமைப்பு சார்பாக கண்ணீர்க் கடலில் தத்தளிக்கும் கடலூர் மாவட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லும் நிகழ்ச்சி திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது. இந்த நிவாரண பயண நிகழ்ச்சியினை மாநகர போலீஸ் கமிஷ்னர் சஞ்சய் மாத்தூர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையில் பெரிதும் பாதிக்கப்பட்ட சென்னை-கடலூர் மாவட்ட மக்களுக்கு திருச்சி மக்கள் மனிதாபிமானத்துடனும், சாதி மதம்  கடந்து செயலாற்ற நினைத்தனர். அந்த வகையில் சென்னை-கடலூர் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை சேகரிப்பதற்கும் சேவை உள்ளத்தோடு கொண்டு சேர்ப்பதற்கும் ”திருச்சி உங்களுடன்” என்ற கூட்டமைப்பினை உருவாக்கினார் திருச்சி ரோட்டரி கிளப் ஆப் மெட்ரோவின் முன்னாள் தலைவரும், திருச்சி ஊர்காவல்படை வட்டார தளபதியுமான ராஜா.trichy with you flood relief3
இந்தக் கூட்டமைப்பின் சார்பாக சென்னை-கடலூர் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை திரட்டும் முயற்சியில்  ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப், இன்னர்வீல், எக்ஸ்னோரா, ரவுண்ட் டேபிள், ப்ரீ மேசன், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு, பார்மா அசோசியேசன், திருச்சி ஊர்க்காவல்படையினர், பிஷப் ஹீபர் கல்லூரி, காவேரி மகளிர் கல்லூரி, திருச்சி இன்ஜினியரிங் கல்லூரி, திருச்சி மாவட்ட பள்ளிக்கல்வித்துறையினர் மற்றும் புரொபஷனல் கூரியர்ஸ், சமூக ஆர்வலர்களும், கல்லூரி மாணவ மாணவியரும் ஈடுபட்டனர்.
அதன்படி கடந்த ஒரு வாரமாக ரூ.40 லட்சம் மதிப்பில் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் பிஷப் ஹீபர் கல்லூரி அரங்கில் சேர்த்து வைக்கப்பட்டன. trichy with you flood relief4
திருமண அரங்கில் ஒரு குடும்பம் நடத்துவதற்கு தேவையான சீர்வரிசை கொண்ட பொருட்கள் அனுப்பி வைப்பதுபோல் கடலூர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மண்ணெண்ணெய் ஸ்டவ், பாய், அரிசி, ரவை, போர்வை, சோப், டூத்பேஸ்ட், ப்ரஸ் 2, தண்ணீர் பாட்டில், பிஸ்கட்ஸ், கடலை மிட்டாய், நைட்டி, டவல், நாப்கின், பிளாஸ்டிக் வாலி, குவளை, டம்ளர் மற்றும் தட்டுகள், உணவு பொருட்கள், மருந்துப் பொருட்கள் என அனைத்தும் தனித்தனியாக பேக் செய்யப்பட்டு நிவாரணக் களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிவாரணப் பொருட்கள் கடலூர் மாவட்டம் தீர்த்தனகரி, சிறுபாளையூர், ஆதிநாராயணபுரம் உள்ளிட்ட கிராமங்களில் வாழும் 2000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு விநியோகம் செய்வதற்காக திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி வளாகத்தில் இருந்து 7 லாரிகளில் இன்று காலை 7 மணியளவில் புறப்பட்டது. இந்த நிகழ்ச்சியினை மாநகர காவல்துறை ஆணையர் சஞ்சய் மாத்தூர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட வட்டார ஊர்க்காவல்படை தலைமை தளபதி பாரி, திருச்சி பிஷப் கல்லூரி முதல்வர் பால் தயாபரன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொருளாளர் கோவிந்தராஜுலு, தில்லை மனோகர், சின்ன அண்ணாமலை, பாலசந்திரன் மற்றும் ரோட்டரி, லயன் சங்க நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு நிவாரணக் களத்திற்கு பயணமாகினர். இவர்களுடன் திருச்சி ஊர்க்காவல்படையினரும், தன்னார்வலர்களும், புரொபஷனல் கூரியர் நிறுவன பணியாளர்களும் நிவாரணக்களத்தில் சேவையாற்ற கடலூருக்கு சென்றுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.