234 தொகுதியிலும் தனித்து போட்டி – கிறிஸ்தவர்கள் வாழ்வுரிமை கட்சி அறிவிப்பு

0 8

12.12.15 Trichy new political party news script (4)திருச்சியில் அகில இந்திய கிறிஸ்தவர்கள் வாழ்வுரிமைக் கட்சி என்ற புதிய கட்சியை துவங்கி அதன் கொடி அறிமுகம் இன்று திருச்சி மீடியா கிளப்பில் நடைபெற்றது. திருச்சியை சேர்ந்த வழக்கறிஞர் ஜி.இருதயசாமி என்பவர் கிறிஸ்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற நோக்கத்திற்காக புதிய அரசியல் கட்சியை துவக்கியுள்ளதாக தெரிவித்தார். தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திண்டுக்கல் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது வன்னிய கிறிஸ்தவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் எம்பிசி பட்டியலில் சேர்த்திடுவோம் என வாக்குறுதி அளித்தார். ஆனால் 4 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அவர் அளித்த வாக்குறுதியை 12.12.15 Trichy new political party news script (3) நிறைவேற்றவில்லை, மேலும் முதல்வரை சந்தித்து எங்களது கோரிக்கைகளை தெரிவிப்பதற்காக நேரம் கேட்டும் இதுவரை நேரம் கிடைக்கவில்லை, மேலும் தலித் கிறிஸ்தவர்களுக்கு எஸ்சி உரிமை, கிறிஸ்தவர்களில் அவரவர் சாதிக்குரிய பிசிசி ஒதுக்கீடு உரிமை வேண்டும், உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காகவே புதிய அரசியல் கட்சி ஆரம்பித்திருப்பதாக தெரிவித்தார். நாங்கள் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராக இருப்பதாக தெரிவித்தார். மேலும் கிறிஸ்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கு தங்களது ஆதரவை தரவும் தயாராக இருப்பதாக இருதயசாமி தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.