தமிழக முதல்வர் விமானத்தில் சுற்றி படம் காட்டினார் – தமிழ்நாடு ஜவ்ஹித் ஜமாத் குற்றசாட்டு

0 8

வெள்ள நிவாரணத்தில் ஆளுங்கட்சி விமானத்தில் சுற்றி படம் காட்டியதோடு, தமிழக அரசு சரியான திட்டமிடுதலை செய்ய தவறிவிட்டது என தமிழ்நாடு ஜவ்ஹித் ஜமாத் குற்றசாட்டியுள்ளது.

14.12.2015 Trichy TNTJ Press Meet (1)
தமிழகத்தில் கடந்த இரண்டு வார காலமாக பெய்த கனமழையால் சென்னை, கடலூர், நாகை, பாண்டிசேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இந்த பகுதிகளில் தமிழ்நாடு ஜவ்ஹித் ஜாமத்தை சேர்ந்த உறுப்பினர்கள் 35ஆயிரம் பேர் மீட்டு பணியில் ஈடுபட்டனர்.

இதற்காக திருச்சியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட தமிழ்நாடு ஜவ்ஹித் ஜமாத் மாநில தணிக்கை குழு உறுப்பினர் ரஹமத்துல்லா பேசுகையில் திருச்சி மாவட்டத்தில் மட்டும் சுமார் 44 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை மக்களுக்கு கொண்டு சேர்த்துள்ளதாகவும், இந்த மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த இம்ரான் (17) என்ற வாலிபர் விஷ பூச்சி கடித்து இறந்துள்ளார்.

12341372_1095798670439146_5692346558128114320_n-225x300இதுக்குறித்து தமிழக அரசு எந்த நிவாரணமும் வழங்கவில்லை. இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. எனவே தமிழக அரசு அந்த குடும்பத்திற்க்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் தமிழகத்தை ஆளும் அரசானது நிவாரண பணியை விமானத்தில் இருந்து பார்வையிட்டனர். இது மக்களுக்காகவும், மக்கள் கேள்வி எழுப்பிவிட கூடாது என்பதற்காகவும் தமிழக முதல்வர் படம் காட்டியுள்ளார். இது தான் நிவாரண பணியா என்று கேள்வி எழுப்பியதோடு, நிவாரண தொகையாக 5ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டு தற்போது 1 லட்சம் ரூபாய் வரை உயர்த்தியுள்ளதாக தகவல் கூறுகின்றனர்.

இது காய்கறி வியாபாரமா விலையை ஏற்றுவதும், குறைப்பதும் மக்களின் வாழ்வாதாரம் என்பதை அரசு ஏன் கவனத்தில் கொள்ளவில்லை. 5ஆயிரம் என்பது ஒரு குடும்பத்திற்க்கு போதுமானது இல்லை என்றும், வெள்ளத்தால் பழுதடைந்த மின்வசாதன பொருட்களின் விலையே இன்று 50ஆயிரத்திற்;;க்கும் மேல் இருக்கும் ஆனால் தமிழக அரசு கண் துடைப்பிற்க்கு நிவாரணம் என்ற பெயரில் 5ஆயிரம் ரூபாய் வழங்குவது போதுமானது இல்லை என்றும் ஒவ்வொரு வீட்டின் இழப்பீடுகளுக்கும் அரசு தணிக்கை செய்து வழங்க வேண்டும்.

அதோடு நிதி முழுவதும் யாருக்கு சென்று சேர்ந்தது என்பது முழுமையாக கணக்கிட வேண்டும் ஏனென்றால் நாங்கள் கொண்டு வந்த நிவாரணத்திற்கே ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என்று கூறியவர்கள். நாளை நிவாரணத்திலும் கட்சி காரர்களுக்கு மட்டும் நிவாரணம் வழங்கிவிட்டு கணக்கு காண்பிப்பார்கள் எனவே நிவாரணத்திற்க்கு என்று மத்திய அரசு ஒதுக்கிய நிதி மற்றும் மாநில அரசு ஒதுக்கிய நிதி, எத்தனை பயணாளிகளுக்கு சென்றடைந்தது என்பது உள்ளிட்ட பணிகள் குறித்த வெள்ளை அறிக்கை தாக்கல் தமிழக அரசு செய்ய வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.