வாழை இலை குடும்பம் திருச்சியில்வழங்கிய உயிர் தானம் !

0 18

16.12.2015 Trichy Blood donation for flood relief (5)தமிழகத்தை புரட்டிபோட்ட கனமழையானது தன்னுடைய கோபத்தையும், கோர முகத்தையும் கடலூர்,சென்னை,உள்ளிட்ட பல கடலோர மாவட்டங்களில் வெள்ளப்பெருக்காக காட்டியதால் பல லட்சம் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டது.

அதில் பலர் இறந்தும், காணாமலும் போனார்கள் பலர் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத நிலையில் மறைந்தும் போனார்கள். இப்படிபட்ட நேரத்தில் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இருந்து ஒவ்வொரு நிமிடமும் மக்கள் தங்களால் இயன்ற பண உதவிகளையும், பொருள் உதவிகளையும் இரவு பகல் பாராமல் வழங்கினார்கள்.

அதனை சரியான நேரத்தில் பல தொண்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொண்டு சேர்த்தனர்.

16.12.2015 Trichy Blood donation for flood relief (1)இருப்பினும் இந்த வெள்ள பாதிப்பில் பலருடைய உடல்நிலை மோசமானது பலருக்கு தங்களுடைய உடம்புக்கு என்ன பிரச்சனை என்பதை கூட அறிந்து கொள்ள முடியாமல் மருத்துவத்திற்காக பலர் ஏங்கி தவித்துள்ளனர்.

எவ்வளவு பொருட்கள், பணம் கொடுத்தாலும் உடல்நிலை பாதிப்படைந்தால் நாம் முக்கியத்துவம் கொடுப்பது உடல்நலத்திற்காக மட்டும் தான் அப்படிபட்ட இந்த சூழலில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு திருச்சியில் இயங்கி வரும் பனானா லீப் என்ற தனியார் உணவு விடுதியில் பணியாற்றும் ஊழியர்கள் இரத்த தானம் செய்துள்ளனர்.

சென்னை மற்றும் கடலூர் மாவட்டகளில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு போதிய மருந்துகள் கொடுக்கப்பட்டாலும் இரத்தம் தேவைபடுவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் இரத்தம் கிடைப்பதில் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.

16.12.2015 Trichy Blood donation for flood relief (4)இதனை கருத்தில் கொண்டு திருச்சியில் உள்ள பனானா லீப் தனியார் உணவு விடுதி ஊழியர்கள் 500 பேர் இன்று திருச்சி அரசு பொது மருத்துவமனையுடன் இணைந்து இரத்ததானம் செய்தனர்.

அனைத்து ஊழியர்களுக்கும் முறையாக இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு அவர்களுடைய இரத்த வகை பற்றி தெரிந்து கொண்டு, உடல் எடை, இரத்த கொதிப்பு உள்ளிட்டவற்றை பரிசோதனை செய்யப்பட்ட பிறகு ஊழியர்களிடம் இருந்து இரத்தம் தானமாக பெறபட்டது.

இவை அனைத்தும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சென்றடையும் விதத்தில் அரசு மருத்துவமனை ஊழியர்கள் பாதுகாப்பான பெட்டகங்களில் சேமித்து வைத்துள்ளனர். மேலும் அனைத்து ஊழியர்களும் அரசு மருத்துவமனைக்கு தங்களுடைய உடல் உறுப்புகள் மற்றும் கண்களை தானம் செய்துள்ளனர்.

பொருள் உதவி, பண உதவி என்பதை தாண்டி இந்த உயிர் தானம் பலருடைய வாழ்வில் ஒளி ஏற்றி வைக்கும் என்பதில் எந்தவித ஐய்யமும் இல்லை.

இனி ஒவ்வொரு வருடமும் இதுபோன்று தங்களுடைய இரத்தங்களை அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு கொடுக்க உள்ளதாகவும், யாரேனும் அவசர குருதி தேவைக்கு தங்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.