400 ரயில் நிலையங்களில் வைஃபை வசதியை செய்து தருவதாக கூகுல் ஒப்பந்தம்

0 3

Google-wifiகூகுள் நிறுவனத்தின் சார்பில் இந்தியா முழுவதும் உள்ள 100 ரயில் நிலையங்களில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் வை-ஃபை வசதி ஏற்படுத்தப்படும் என அதன் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) சுந்தர் பிச்சை தெரிவித்தார்.

 

தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட பின்னர், இரண்டாவது முறையாக இந்தியா வந்துள்ளார்.

 

இந்திய ரயில்வேயின் தொலைதொடர்பு பிரிவான ரயில்டெல் நிறுவனத்துடன் இன்று கூகுள் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. இதன்படி இந்தியா முழுவதும் உள்ள 400 ரயில் நிலையங்களில் கூகுள் நிறுவனம் இணையதள சேவைக்கான வை-ஃபை வசதியை வழங்கும்.

 

இதன் பின்னர் நடைபெற்ற ‘கூகுள் பார் இந்தியா’ என்ற நிகழ்ச்சியில் பேசிய சுந்தர் பிச்சை, உலகிலேயே அதிக மக்கள் தொகையை கொண்ட இரண்டாவது நாடான இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் இணைய வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற கூகுள் நிறுவன திட்டத்தின் கீழ் இந்த வசதி செய்துதரப்பட உள்ளது.

 

மும்பை ரயில் நிலையத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வை-ஃபை வசதி கிடைக்கும். 2016-ஆம் ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் 100 ரயில் நிலையங்களில் இந்த வசதி ஏற்படுத்தித் தரப்படும்.

 

அடுத்த ஆண்டு முதல் “டேப் டூ டிரான்ஸ்லேட்’ என்ற புதிய வசதியை கூகுள் நிறுவனம் வழங்கவிருக்கிறது. இதன் மூலம் ஆன்ட்ராய்டு மொபைல் போனில் உள்ள எந்த வாக்கியத்தையும் மொழிப்பெயர்ப்பு செய்து காணலாம்.

 

மேலும், வானில் பறக்கவிடப்படும் பலூன் மூலம் வழங்கப்படும் இணைய தள சேவையான ‘புராஜக்ட் லூன்’  திட்டமும் விரைவில் இந்தியாவில் தொடங்கப்படும். இதன்மூலம் ஊரகப் பகுதிகளுக்கும், மலைவாழ் இடங்களுக்கும் இணையதள வசதி வழங்க முடியும் என்றார் சுந்தர் பிச்சை.

 

இந்தியா வந்துள்ள சுந்தர் பிச்சை, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியையும், பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்க உள்ளார். இதுதவிர, தில்லி பல்கலைக்கழகத்திலும் மாணவர்கள் மத்தியிலும் உரையாற்றுகிறார்.

Leave A Reply

Your email address will not be published.