வாக்காளர் அட்டை இழந்தவர்களுக்கு. கட்டணமின்றி மாற்று வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் தேர்தல் ஆணையம்

0 2

Evening-Tamil-News-Paper_2016413212சமீபத்திய மழை மற்றும் வெள்ளப்பெருக்கின்போது பாதிக்கப்பட்ட பலர் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை இழந்துள்ளனர். இதுபோன்ற நிகழ்வுகளில் வாக்காளர் அடையாள அட்டையை இழந்தவர்களுக்கு கட்டணமின்றி மாற்று வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதற்கு தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது.

மேலும் தற்போது தமிழகத்தில் மழை வெள்ளத்தால் வாக்காளர் அடையாள அட்டையை இழந்த வாக்காளர்களுக்கு சிறப்பு முகாம்களில் கட்டணமின்றி வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதன் அடிப்படையில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட சென்னை, கடலூர், திருவள்ளுர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள வாக்காளர் அடையாள அட்டையை இழந்த வாக்காளர்களுக்கு கட்டணமின்றி மாற்று வாக்காளர் அடையாள அட்டையை சிறப்பு முகாம்களில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தவிர மேற்கண்ட மாவட்டங்களில் வாக்காளர் அடையாள அட்டையை இழந்தவர்களுக்கு 9444123456 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி மாற்று வாக்காளர் அடையாள அட்டையை பெறும் வசதியையும் ஏற்படுத்தியுள்ளது. இவ்வசதியை பெறுவதற்கு கீழ்கண்ட வழிமுறையை பின்பற்ற வேண்டும்.

1. வாக்காளர் அடையாள அட்டை எண் தெரிந்தவர்கள் தங்களது கைபேசி மூலம் <EPIC> <SPACE> <EPIC No> என்று தட்டச்சு செய்து 9444123456 என்ற கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவேண்டும். அவரது விவரங்கள் அவருடைய கைபேசிக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும். அவ்விவரங்கள் சரியாக இருப்பின் வாக்காளர் <yes> என்று பதில் குறுஞ்செய்தி 9444123456க்கு அனுப்பவேண்டும். அதன் பின் மாற்று அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

2. வாக்காளர் அடையாள அட்டை எண் தெரியாதவர்கள் <EPIC> என்று தட்டச்சு செய்து 9444123456 என்ற கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவேண்டும். வாக்காளரின் கைபேசி எண் தேர்தல் ஆணைய தரவு தளத்தில் எற்கனவே பதியப்பட்டிருப்பின், வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான தகவல்கள் அவருடைய கைபேசிக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும். அவ்விவரங்கள் சரியாக இருப்பின் வாக்காளர் <yes> என்று பதில் குறுஞ்செய்தி 9444123456க்கு அனுப்பவேண்டும். அதன்பின் அவருக்கு மாற்று வாக்காளர் அடையாள அட்டை வழங்க உடன் நடவடிக்கை எடுக்கப்படும்.

விவரங்கள் சரியில்லையெனில் வாக்காளர் <no> என தட்டச்சு செய்து 9444123456க்கு அனுப்பவேண்டும் அல்லது 1950 என்ற கட்டணமில்லா எண்ணினை தொடர்பு கொண்டு விவரங்களை அளிக்கலாம்.

3. வாக்காளரது கைபேசி எண் தேர்தல் ஆணைய தரவு தளத்தில் பதிவு செய்யப்படவில்லை எனில் வாக்காளர் 1950 என்ற எண்ணினை தொடர்பு கொண்டு தனது விவரங்களை அளிக்கலாம். அவ்விவரங்களின் அடிப்படையில் வாக்காளருக்கு மாற்று வாக்காளர் அடையாள அட்டை வழங்க உடன் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், பகுதியாக சேதமடைந்த குடியிருப்புகளில் வசிக்கும் வாக்காளர்கள் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் இணையதளத்திலிருந்து (http://www.elections.tn.gov.in) படிவம் 001-ஐ பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்தபின் மாற்று வாக்காளர் அடையாள அட்டையை பெறலாம். இவ்வாய்ப்பினை பாதிக்கப்பட்ட அனைத்து வாக்காளர்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது

Leave A Reply

Your email address will not be published.