மோடி நல்ல நடிகர்-நாட்டுக்காக ஒரு பாஜ தொண்டனாவது உயிரை தியாகம் செய்ததாக வரலாறு இருக்கா?-கேரளாவில் விளாசிய குஷ்பு

0 10

Kushboo-congresகமலஹாசன், மம்மூட்டி, மோகன்லாலை விட, மோடிதான் இந்தியாவின் தலைசிறந்த நடிகராக உள்ளார் என்று கோழிக்கோட்டில்  நடந்த மாணவர் காங்கிரஸ் நிகழ்ச்சியில் நடிகை குஷ்பு பேசினார்.

கேரள மாநிலம்  கோழிக்கோட்டில்  நடைபெற்ற காங்கிரஸ் மாணவர் சங்கமான கே.எஸ்.யு. சார்பில்  மத்திய அரசைக் கண்டித்து  கோழிக்கோட்டில் சங்கமம்  எனும்      நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்  கலந்து கொண்டு நிகழ்ச்சியில் பேசிய  காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு நாட்டின் சிறந்த நடிகர் நரேந்திர மோடி என்று கூறியுள்ளார்.

நிகழ்ச்சியில் பேசிய குஷ்பு, ”மோடி சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல, இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர். கமல், மோகன்லால், மம்முட்டி ஆகியோர் மோடியின் நடிப்பில் தோல்வி அடைந்து விடுவார்கள். மோடி பேசுகிறார், ஆனால் செயல்பாடு குறைவாக உள்ளது.

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது அவர் மவுன விரதத்தில் இருக்கிறார் என மோடி குற்றம்  சாட்டி மவுனத்தில் இருப்பதாக அடிக்கடி குற்றம் சாட்டி வந்த மோடி தற்போது தாத்ரி உட்பட பல சம்பவங்களில் வாய் திறக்காமல் இருப்பது ஏன்? தற்போது நாட்டில் தேர்தல் நடந்தால் காங்கிரஸ்தான் வெற்றி பெறும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. மக்கள் பாஜ அரசின் மீது கடுமையான  வெறுப்பில் இருப்பதுதான் இதற்கு காரணம்.

இந்தியாவின் சிறந்த நடிகர்களான கமலஹாசன், மம்மூட்டி, மோகன்லாலை விட பிரதமர் மோடிதான் இப்போது தலைசிறந்த நடிகராக உள்ளார்.  இவர்கள் அனைவரும் மோடியின் நடிப்புக்கு முன்னால் தோற்றுப்போய் விடுவார்கள்.

நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித் தந்த மகாத்மா காந்தியை விட,  அவரை சுட்டுக் கொன்ற கோட்சே தான் பாஜவினருக்கு மகாத்மாவாக உள்ளார். நாட்டில் இப்போது தேர்தல் வந்தால் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி. பாரதீய ஜனதாவை சேர்ந்த ஒரு தொண்டர் கூட இதுவரை நாட்டிற்காக உயிர் தியாகம் செய்ததில்லை. ஆனால் மகாத்மா காந்தியை கொலை செய்த கோட்சே, அவர்களுக்கு மகாத்மாவாக தெரிகிறார்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில், அதன் பலனை பொதுமக்களுக்கு வழங்காமல் எண்ணெய் கம்பெனிகள் லாபம் சம்பாத்தித்து வருகிறது. ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவில் புல்லட் ரெயில் திட்டத்தை தொடங்க ஆர்வம் காட்டிவரும் மோடி அரசு வீடுகள் இல்லாத கோடிக்கணக்கான மக்களை கவனிக்க தவறிவிட்டார் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.