திருநங்கைகளின் சல்லாபத்தில் சிக்கி தவிக்கும் பயணிகள் – திருச்சியின் இரவு நேர பயங்கரம்

0 18

ransgendersதிருச்சிக்கு என்று பல ஆச்சரியமான விஷயங்களும், பல வரலாற்று நிகழ்வுகளும் உண்டு. ஆனால் அதற்க்கு நேர்மாறான நிகழ்வுகளும் நடைபெறுவது பலருடைய கண்களுக்கு தெரிந்தும் அதனை கண்டுகொள்ளாமல் போகும் அதிகாரம் படைத்தவர்களும், நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது தான் இந்த பதிவு.

கடந்த சில மாதங்களாக திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள ஒருசில முக்கிய இடங்களில் முகாமிடும் திருநங்கைகள் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அவர்கள் கையாளும் வித்தைகள் பல பயணிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதோடு மட்டும் அல்லாமல் காத்திருக்கும் பயணிகளை வதைப்பது என்பது தொடர் கதையாகி வருகிறது.

இருட்டின் மறைவிற்க்குள் நடைபெறும் இப்படிபட்ட மோசமான நிலையை அனுபவித்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த அமுதன் என்ற பட்டதாரி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை செல்வதற்காக மதுரையிலிருந்து திருச்சியில் அவரது உறவினர் வீட்டிற்க்கு வந்துவிட்டு சென்னை செல்ல இரவு 11.30 மணிக்கு மத்திய பேருந்து நிலையம் வந்துள்ளார். அவர் முன்பதிவு செய்திருந்த பேருந்தானது அரை மணி நேரம் தாமதமாக வந்ததால் 30 நிமிடங்கள் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறைக்கு அருகாமையில் உள்ள பயணிகள் அமரும் இடத்தில் அமர்ந்து தன்னுடைய செல்போனில் பாடல் கேட்டு கொண்டிருந்தார் பத்து நிமிடங்கள் கழித்து அவருக்கு அருகில் வந்த ஒரு திருநங்கை அவரின் அருகில் அமர்ந்து கேலி பேசி கொண்டிருந்தார்.THTRANSGENDERS

சிறிது நேரத்தில் அந்த வாலிபரின் அருகில் இருந்த அவரது கைப்பையை எடுக்க முயற்சி செய்துள்ளார்கள். இதனை அறிந்த அந்த வாலிபர் அந்த இடத்தை காலி செய்து சற்று தொலைவில் சென்று அமர்ந்துள்ளார். அவரை பின் தொடர்ந்த திருநங்கை மற்றொரு திருநங்கையை அழைத்து கொண்டு அவர் அமர்ந்து இருந்த இடத்தில் அருகாமையில் அமர்ந்து கொண்டு அவரிடம் பணம் கேட்டுள்ளனர். அவர் தர மறுத்ததால் தொடர்ந்து அவரை தொந்தரவு செய்தததோடு அவருடைய உடம்பில் ஒருசில இடங்களை கிள்ளியதோடு, தரக்குறைவான வார்த்தைகளால் பேசியுள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர் மீண்டும் ஆட்டோ பிடித்து அவருடைய உறவினர் வீட்டிற்க்கே சென்றுவிட்டார். மீண்டும் மறுநாள் காலை பேருந்தில் சென்னைக்கு சென்றுள்ளார். இது ஒரு பயணிக்கு நடைபெற்ற சம்பவம் இதுபோல பல பயணிகள் சபல திருநங்கைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாம் இங்கு திருநங்கைகளை குற்றம் சொல்ல விரும்பவில்லை. அவர்களுக்கு என்று தனி அங்கிகாரம் கொடுக்கப்படாதது தான் இதற்கெல்லாம் காரணம், அவர்களுக்கு என்று ஒரு வேலை வாய்ப்பை அரசு ஏற்படுத்தி கொடுத்தால் இதுபோன்ற இழிவான செயல்களில் ஈடுபட மாட்டார்கள்.

அதிலும் ஒருசிலர் வேலை செய்து சம்பாதிப்பதைவிட இதுபோன்ற இழிவான செயல்களிலும், அடுத்தவர்களை மிரட்டியும், மற்றவர்களை கஷ்டபடுத்தியும் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு ஒருசில நடைபெறும் குற்ற செயல்களில் திருநங்கைகளுக்கும் பங்கு உண்டு. இது ஒருபுறம் இருக்க இரவு நேரத்தில் ரோந்து செல்லும் காவல்துறையினர் அவர்களை துரத்த நினைத்தாலும் அவர்கள் அந்த இடத்தைவிட்டு விலகுவதாக தெரியவில்லை.

அதிலும் இன்னொரு கொடுமையும் உண்டு ஒருசில காக்கிகள் திருநங்கைகளுடன் நட்பு வைத்துள்ளது இன்னும் பலருக்கு வசதியாக உள்ளது. திருநங்கைகள் சம்பாதிக்கும் பணத்தில் 2 சதவீத மாமுல் வேர தனியாக வழங்கப்படுகிறது. இதனால் காக்கிகள் இவர்களை கண்டு கொள்வதில்லை. மத்திய பேருந்து நிலையம் என்பது திருச்சியை சேர்ந்த பொதுமக்கள், மற்ற மாவட்ட பயணிகள், வெளமாநில பயணிகள், வெளிநாட்டினர் என பலரும் வந்து போகும் இடம்.

இங்கு பொது மக்கள் மத்தியில் எந்தவித பயமுமின்றி, தைரியமாக பயணிகளை தொடர்ந்து நச்சரித்தும், தொடர்ந்து துன்புறுத்தியும் பணம் சம்பாதிக்கும் கூட்டத்தை காவல்துறை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் தடுமாறிவிடமால் கடமையை சரியாக செய்தால் பல பயணிகள் துன்பத்தில் இருந்து காப்பாற்றபடுவார்கள் இதனை சரி செய்ய வேண்டும் என்பது பயணிகளின் வேண்டுகோள்.

Leave A Reply

Your email address will not be published.