புனிதர் பட்டம் :அன்னை தெரசா நிகழ்த்திய 2-வது அதிசயம் அங்கீகரிப்பு :

0 14

வாடிக02 ன்: அன்னை தெரசா நிகழ்த்திய 2-வது அதிசயத்தை போப் பிரான்சிஸ் அங்கீகரித்துள்ளதால் அவருக்கு அடுத்த ஆண்டு புனிதர் பட்டம் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அப்பேனியா நாட்டில் 1910-ம் ஆண்டு பிறந்த அன்னை தெரசா கொல்கத்தாவில் தனது சேவை மையத்தை நிறுவி ஏழைகளுக்காக பல்வேறு சேவைகளை செய்து 1997-ம் ஆண்டு மறைந்தார். மறைவுக்கு பின் அன்னை தெரசாவை வழிப்பட்ட கிறிஸ்துவர் அல்லாத பெண் ஒருவருக்கு ஏற்பட்டிருந்த நோய் குணமானது நிரூபிக்கப்பட்டதால் அதனை அதிசயமாக கருதி 2003-ம் ஆண்டு தெரசாவுக்கு அருளாளர் பட்டம் வழங்கப்பட்டது.

இது புனிதர் பட்டம் வழங்குவதற்கான முதற்படியாக கருதப்பட்ட நிலையில் அன்னை தெரசா நிகழ்த்திய மேலும் ஒரு அதிசயத்தை போப் பிரான்சிஸ் அங்கீகரித்துள்ள01தாக இத்தாலிய கத்தோலிக்க பேராரயர்கள் கூட்டமைப்பின் அதிகாரப்பூர்வ நாளேடு ஒன்று செய்தி வெளியி்ட்டுள்ளது. மூளையில் கட்டியால் பாதிக்கப்பட்ட ஒருவரின் குடும்பத்தினர் அன்னை தெரசாவை வழிப்பட்டதன் மூலம் அந்த நோய் குணமானதாகவும், அதற்கான காரணத்தை மருத்துவர்களால் விளக்க முடியவில்லை என்றும் அந்த நாளேடு கூறியுள்ளது.

இரண்டு அதிசயங்கள் நிகழ்த்தியவர்களுக்கு புனிதர் பட்டம் வழங்குவது கிறிஸ்துவ மதத்தின் வழக்கம் என்பதை சுட்டிக்காட்டியுள்ள நாளேடு அன்னை தெரசாவின் இரண்டு அதிசயங்களும்ங நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் புனிதர் பட்டம் வழங்கப்படும் என்று கூறியுள்ளது.

ஆனால் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் தங்களிடம் இல்லை என வாட்டிகன் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இருப்பினும் ஏற்கனவே பலருக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டதை குறிப்பிட்ட நாளேடு முன்கூட்டியே வெளியிட்டதால் அன்னை தெரசாவுக்கு அடுத்த ஆண்டு புனிதர் பட்டம் வழங்கப்படுவது உறுதி என நம்பப்படுகிறது

Leave A Reply

Your email address will not be published.