ஊழல் சார்பாக மத்திய நிதி அமைச்சருக்கு 5 கேள்விகள்- சர்ச்சை

0 21

kejriwal-combinationjaitleyடெல்லி கிரிக்கெட் சங்கத்தில் நடைபெற்ற ஊழலில்  மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு தொடர்பு இருப்பதாக ஆம் ஆத்மி குற்றம் சுமத்தி வரும் நிலையில், இன்று மேலும், அவருக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக  அருண் ஜெட்லிக்கு 5 கேள்விகளை ஆம் ஆத்மி முன்வைத்துள்ளது.

இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆஸ்தோஷ்   கூறியதாவது:-  டெல்லி பெரஷோ கோட்லா மைதானத்தில் உள்ள கார்பரேட் பாக்ஸை துணை குத்தகைகக்கு ”21 பர்ஸ்ட் சென்சூரி” என்ற நிறுவனத்துக்கு டெல்லி கிரிக்கெட் சங்கம் அளித்துள்ளது. அருண் ஜெட்லியின் நண்பருக்கு சொந்தமான 21 பர்ஸ்ட் சென்சூரி  நிறுவனம் இந்த ஒப்பந்தத்தின் மூலம் ரூ 5 கோடி லாபம் அடைந்துள்ளது.  இந்த நிறுவனத்தில் பங்குதாரர்களாக அவரது நெருங்கிய உறவினர்கள் யாராவது உள்ளனரா? என்பது  குறித்து அருண் ஜெட்லி விளக்கம் அளிக்க வேண்டும்.

அதேபோல், இந்திய ஹாக்கி அணிக்கு ரூ 5 கோடி அளிக்க வேண்டும் என்று ஒஎன்.ஜி.சிக்கு அருண் ஜெட்லி அழுத்தம் கொடுத்துள்ளார். அழுத்தம் கொடுத்தற்கு பின்னால் என்ன காரணம் இருக்கிறது என்பதை அருண் ஜெட்லி விளக்க வேண்டும்

பெரஷோ கோட்லா மைதானத்தை மறு புனரமைப்பு செய்ததில் பெருமளவு நிதி குளறுபடி  நடைபெற்றுள்ளது.பொதுத்துறை நிறுவனமான ஈபிஐஎல் க்கு ரூ 57 கோடி வழங்கப்பட்டுள்ள போதிலும், மொத்த செலவீனமான ரூ 117 கோடி ரூபாயில் மீதமுள்ள ரூ 57 கோடி ரூபாய் 9 நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களில் பதிவு முகவரியும், மின்னஞ்சல்கள் மற்றும் இயக்குநர்கள் பெயர் அனைத்தும் ஒன்றாக உள்ளன. இந்த நிறுவனங்கள் பற்றி அருண் ஜெட்லிக்கு தெரிந்துள்ளது. அப்படியானால், இது ஊழல் இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆம் ஆத்மி தலைவர் சஞ்செய் சிங் கூறுகையில், நாங்கள் முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளை எழுப்பியுள்ளோம். ஆனால், ஜெட்லி தெளிவற்ற பதிலை அளித்துள்ளார். இதன் காரணமாகவே இந்த 5 கேள்விகளை நாங்கள் முன்வைத்துள்ளோம். ஹாக்கி இந்தியா தலைவர் நரேந்திர பாத்ராவுடன் உள்ள தொடர்பு குறித்து அருண் ஜெட்லி கூற வேண்டும்” என்றார்.

டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு உள்துறை அமைச்சகம் தகவல் அளித்தது. இதையடுத்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் டெல்லி அரசுக்கு எழுதிய கடிதத்தை அடுத்தே, முறைகேடு விசாரிக்க டெல்லி அரசு குழு அமைத்தது என்று ஆம் ஆத்மி விளக்கம் அளித்தது.

அண்மையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் முதன்மை செயலர் ராஜேந்திர குமார் மீதான ஊழல் குற்றச்சாட்டின் பேரில்  டெல்லி தலைமைச்செயலகத்தில் சிபிஐ சோதனை நடத்தியது. இதையடுத்து, மத்திய அரசை கடுமையாக சாடிய ஆம் ஆத்மி, அரவிந்த் கெஜ்ரிவாலை குறிவைத்து இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும், டெல்லி கிரிக்கெட் சங்கம் தொடர்புடைய கோப்புகளை சிபிஐ அதிகாரிகள் பார்வையிட்டதாகவும் தெரிவித்தது. அதில் இருந்து மத்திய அமைச்சர் பொறுப்பில் இருந்து அருண் ஜெட்லி பதவி விலக வேண்டும் என்று ஆம் ஆத்மி கோரி வருகிறது. அரவிந்த் கெஜ்ரிவாலும், இவ்விவகாரம் மத்திய அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்.

[/checklist]

Leave A Reply

Your email address will not be published.