சில மணி நேரம் கூட நீடிக்காத ஐஎஸ்எல் கால்பந்து சென்னை சாம்பியன் கொண்டாட்டம்– கைது செய்யப்பட்ட சென்னை அணி கேப்டன்

0 14

chennaiyin-fc-isl-trophyஐஎஸ்எல் கால்பந்து போட்டி  சாபியனானது சென்னை – கைது செய்யப்பட்ட சென்னை அணி கேப்டன் விறுவிறு கால்பந்து

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத் தில் நேற்று சென்னை – கோவா அணிகள் மோதின. இப்போட்டியின் முதலாவது பாதி ஆட்டத்தில் சென்னை அணியின் கட்டுப்பாட்டிலேயே பந்து அதிக நேரம் இருந்தது. ஆனால் அதைப் பயன்படுத்தி அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை. சென்னை அணியின் கோல் அடிக்கும் முயற்சிகளை கோவா வீரர்கள் முறியடித்தனர்.

ஆட்டத்தின் 54-வது நிமிடத்தில் கிடைத்த பெனாலிடி கிக் வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்த பெலிசாரி சென்னை அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். ஆனால் அது நீண்டநேரம் நிலைக்கவில்லை. ஆட்டத்தின் 58-வது நிமிடத்தில் கோவா வீரர் ஹகிப் கோல் அடித்து ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டுவந்தார். இதைத் தொடர்ந்து 61-வது நிமிடத்தில் தங்களுக்கு கிடைத்த மற்றொரு பெனாலிடி கிக் வாய்ப்பை சென்னை அணி தவறவிட்டது.

elano blumer arrest 1இந்நிலையில் ஆட்டத்தின் 87-வது நிமிடத்தில் கோவாவின் ஜோஃப்ரே ஒரு கோல் அடித்து அந்த அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். ஆட்டத்தின் கடைசி நிமிடங்களில் விறுவிறுப்பாக ஆடிய சென்னை வீரர்களுக்கு அடுத்தடுத்து 2 கோல்கள் கணக்கில் சேர, சென்னை அணி 3-2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

ரசிகர்களிடையே கடந்த 3 மாதங்களாக மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதி மோதல் கோவாவில் உள்ள ஃபடோர்டாவில் நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. போட்டியின் முடிவில், 3-2 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழத்தி, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது சென்னையின் எஃப்சி. சாம்பியன் கோப்பை வென்ற சென்னை அணிக்கு ரூ.8 கோடியும், 2-ஆவது இடம்பிடித்த கோவா அணிக்கு ரூ.4 கோடியும் பரிசாக வழங்கப்பட்டது. அதிக கோல் அடித்த வீரருக்கான தங்க ஷுவை சென்னை அணியின் மெண்டோஸாவுக்கும் (13 கோல்கள்), சிறந்த கோல் கீப்பருக்கான தங்க கையுறையை சென்னையின் அபுலா எடலும் பெற்றனர்.

இந்நிலையில், போட்டி முடிவடைந்தபிறகு கோவா அணியின் இணை உரிமையாளர் தத்தாராஜ் சல்கோன்கரைத் தாக்கிய குற்றத்துக்காக கோவா காவல்துறை சென்னை கேப்டன் எலோனா புளூமரை கைது செய்துள்ளது.

big_elano_blumerகோவா இணை உரிமையாளரை சென்னை அணி கேப்டன் எலோனா புளூமர் தாக்கியதால் பரிசளிப்பு விழாவில் கலந்துகொள்ளாமல் மைதானத்தை விட்டு வெளியேறினார் கோவா முதலமைச்சர் லட்சுமிகாந்த். கோவாவின் மற்றொரு இணை உரிமையாளரான ஸ்ரீனிவாஸ் டெம்போ இச்சம்பவம் பற்றி கூறும்போது, போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றபிறகு கோவா வீரர்களை நோகடிக்கும்படி பேசினார் புளூமர். இதை எதிர்த்து தத்தாராஜ் கேள்வி கேட்டபோது, அவரை புளூமர் தாக்கினார் என்றார்.

கோவா அணி சார்பில் காவல்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டு, அதன் பேரில் முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று பிரிவுகளில் புளூமர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதன்பிறகு இன்று காலையில், ஜாமின் பெற்ற புளூமர், உடனே பிரேசிலுக்குக் கிளம்பிச் சென்றார்.

Leave A Reply

Your email address will not be published.