சேவல் சண்டையின்போது விஷம் தடவிய கத்தி பாய்ந்து ஒருவர் பலி- தடை செய்யப்பட்ட விளையாட்டு தொடரும் அவலம்

0 5

Seval sandai

கரூரில் தடையை மீறி நடைபெற்ற சேவல் சண்டையின்போது விஷம் தடவிய கத்தி பாய்ந்து ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் காந்திகிராமம், ஈ.பி காலனி பகுதியில் உள்ள சாய் நகர் பகுதியை சார்ந்தவர் சிவசுதன். கரூரில் உள்ள தனியார் செல்போன் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவர் சேவல் சண்டையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இந்நிலையில் இழுப்பம்பாளையம் அருகே கருவேலை சீத்தை மரங்கள் அடர்த்தியான பகுதியில் ரகசியமாக சேவல் சண்டை நடைபெறுவதையறிந்த சிவசுதன் அப்பகுதிக்கு சண்டைக் கோழியுடன் சென்றுள்ளார்.

அப்போது அந்த கோழி காலில் கட்டப்பட்டிருந்த விஷக்கத்தி பட்டு சம்பவ இடத்திலேயே சிவசுதன் உயிரிழந்தார். சேவல் சண்டை ஆர்வம் ஒரு உயிரை பறித்த சம்பவம் கரூர் மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இழுப்பம்பாளையம் பகுதியை போல அரவக்குறிச்சி, பூலாம் வலசு, கோவிலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், அரசின் தடையையும் மீறி, நீதிமன்ற உத்திரவையும் மீறி காவல்துறை உதவியுடன் ஆங்காங்கே இரகசியமாக சேவல் சண்டை நடத்தப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதை தடுக்காவிட்டால் உயிர்சேதங்கள் தொடரும் என்பதை கவனித்தில் கொண்டு காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுநல ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.