இருவரின் உயிரை பறித்த வேன் டிரைவர் தப்பி ஓட்டம்- திடுக்கிடும் தகவல்

0 16

accident-graphicதிருச்சி முள்ளிகரும்பூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 70). இவரது பேரன் மகேஸ்வரன் (22). நேற்று இருவரும் மோட்டார் சைக்கிளில் லால்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர்.

உய்யக்கொண்டான் திருமலை சோதனை சாவடி அருகே செல்லும் போது, அந்த வழியாக வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயமடைந்த கிருஷ்ணசாமி சம்பவ இடத்திலேயே இறந்தார். மகேஸ்வரன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வேனை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.